உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 19

கட்கு மேற்பட்டவைகளல்லவென்பதும், அவைகளிற் பழைய இலக்கண இலக்கிய நூல்கள் இல்லை யென்பதுந் தாங்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா? இவைகளையெல்லாந் தாங்கள் ஆராய்ந்து பார்ப்பீர்களானாற் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ச், சாதி சமயக் குறும்புகளும், புராணப் புரட்டுகளும் இல்லாமற், கடவுளை யும், உலகத்தையும், உயிரையும் பற்றிய உண்மைகளையே உள்ளவாறு எடுத்துரைக்கும் அரும்பெரு நூல்களையே யுடைய தமிழ்மொழியிலும், அதனைத் தூயதாக வழங்கிய தமிழ் மேன்மக்களிலும் இறைவனுக்குப் பெரு விருப்பு ருக்கத்தான் வேண்டுமென்பதை எளிதில் அறிந்து காள்ளலாம்.

இறைவனுக்குத் தமிழிற் பெருவிருப்பு உண்மையி னாலன்றோ, திருஞானசம்பந்தர் அன்பினாற் குழைந்துருகிப் பாடிய தமிழ்ப் பதிகங்களை நெருப்பில் வேகவிடாதும், நீரில் இழுக்கப்படாமலும் வைத்து இறைவன் அதன் அருமையைப் புலப்படுத்தினான்? இன்னும் பாண்டியன் கொண்ட வெப்பு நோய் தீர்த்ததும், எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப் பிள்ளையையழைத்ததும் இன்னும் இவைபோன்ற பல அருள் நிகழ்ச்சிகளைக் காட்டியதுந் தமிழேயன்றிப் பிறமொழி அன்றோ! அல்லது பிறமொழியில் இத்தகைய அருள் நிகழ்ச்சிகளைத் தக்க அகச்சான்று புறச்சான்று களுடன் எடுத்துக் காட்டல் இயலுமா? வெறுங் கதைக ளாகப் பின்னோ ரெழுதிவைத்திருப்பவைகளைக் காட்டு வது பயன்படாது.

L

இனி, எடுத்த பொருளைவிட்டுத் திருவள்ளுவரின் திருவுருவம் சைவ அடையாளங்கள் உடையதாகச் செய்யப் பட்டிருப்பது பிசகென்றும், அவ் வடையாளங்களை எடுத்து விட்டு அவரை எல்லா மதத்தவர்களும் பொதுவான உருவத் தோடு வைக்க வேண்டுமென்றும், சிலர் எழுதியதை ஆராய் வோம், பழைய தமிழ் நூலாராய்ச்சியால், இத் தமிழ் நாடெங் கணும் பழைய காலத்திற் பரவியிருந்தது சைவக்கொள்கையே யென்பது புலனாகின்றது. இதற்குப் பண்டை நாள் முதல் நாடெங்கும் அமைக்கப்பட்டிருக்குஞ் சிவபிரான் திரு

ருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/203&oldid=1585803" இலிருந்து மீள்விக்கப்பட்டது