உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

169

களைக் கொண்டே உலகத்திலுள்ள எல்லா மொழிகளின் எல்லா ஒலிகளையும் எளிதில் தெரிவிக்கலா மென்று காலஞ் சென்ற திரு.பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி செய்து நன்கு விளக்கிக் காட்டியிருக்கவும், அவைகளையெல்லாம் ஆராய்ந்து பாராது தமிழ் நெடுங்கணக்கைக் குறுக்க வேண்டுமென்றும் பிறமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழிற் சேர்க்க வேண்டு மென்றும் சொல்வது மிகவும் வருந்தத் தக்கது. குறைபாடில்லாத தமிழ்மொழியைச் சீர்திருத்த வேண்டு மென்று சொல்லும் அவர்கள் குறைபாடு நிரம்பிய ஆங்கிலம் முதலான மொழிகளைச் சீர்திருத்த முன்வராததென் னையோ?

தமிழ்மொழியிலே தான் இறைவனுக்குப் பெருவிருப்பு என்று எம் தமிழ்ப் பேராசிரியர் எழுதியதை ஏளனமாகப் பேசினர் சிலர். உலகத்தில் உள்ள எல்லாரும் நல்ல சொற் களையும் நல்ல சொற்பேசுவாரையுமே விரும்புகின்றன ரன்றித், தீயச்சொல்லையும், தீயசொற் பேசுவாரையும் விரும்புகின்றனரா? இல்லையே, ஒரு தந்தையானவன் தன் மக்கள் பலரு ள்ளு ளும் நல்ல சொற் பேசும் நல்ல தன் புதல்வனையே விரும்புகின்றனனன்றித், தீயசொற் பேசுந் தீய தன் புதல்வர்களை விரும்புகின்றனனா? இல்லையே. அது போல் எல்லாம் வல்ல இறைவனும் இனிய தமிழ் மொழியையும் அதனைப் பாதுகாத்து வழங்கிய இனிய தமிழ் மக்களையுமே பெரிதும் விரும்பினான் என்றால் அதிற் குற்றமென்னையோ? பண்டைக்காலந் தொட்டு இது வரையில் வழங்கும் மொழி தமிழைத் தவிர வேறொன்று உண்டென்று விரல்விட்டுக் காட்ட முடியுமா? எகிப்தியம், சாலடியம், அசிரீயம், எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், ஆரியம், செண்டு, பாலி முதலான பழைய மொழிகளெல்லாம் எங்கே? அவைகளெல்லாம் பொது மக்களாற் பேசப் படாமல் மாண்டு மறைந்துபோகத் தமிழ் மட்டும் இன்னும் பலகோடி பொதுமக்களாற் பேசப்பட்டு பேசப்பட்டு வருவதைத் தாங்கள் எண்ணிப் பார்த்த துண்டா? இப்போது இவ்விந்திய நாட்டிலும் மற்ற ஐந்து நிலப் பிரிவுகளிலும் வழங்கும் பல திறப்பட்ட மொழிகளெல்லாம் நானூறு ஐந்நூறு ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/202&oldid=1585802" இலிருந்து மீள்விக்கப்பட்டது