உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 19

எளிதிற்கற்று, நம் முன்னோர்களின் உயர்ந்த சிறந்த கருத்துக் களை அறியப்பெறுகின்றோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தி ரு க்குறளை நாம் இப்போது எளிதிற் கற்று உணர்தல் போல், இக்காலத்து ஆங்கில மொழியைக் கற்பவர்கள் ஐந்நூறாண்டுகட்கு முற்பட்ட சாசருடைய நூல்களையும், ய முந்நூறாண்டுகட்கு முற்பட்ட ஷேக்ஸ்பியருடைய நூல் க களையும் எளிதிற் கற்றறிதல் கூடுமோ என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆகவே, நமது செந்தமிழ் மொழி ஆறாயிரம் ஆண்டுகட்கு மேலாக நம் முன்னோர்களால் திரிபடையாமற் பாதுகாக்கப்பட்டு வந்ததனால் நாம் அடைந்து வரும் பெரும்பயனும், ஆங்கில மொழி, காலங்க டோறும் மாறி வந்ததனால் ஆங்கில மக்கள் நெடுங்காலம் வரையில் அதனாற் பயன் பெறாதிருந்து, அதனால் பெரிதும் இடர்ப்பட்டு, இப்போது அதனைத் திரிபடையாமற் பாது காத்து வருதலால் அவர்கள் அடைந்து வரும் நன்மையும் ஆராய்ந்து காண்பவர் தமிழ் பிறமொழிக் கலப்பினால் திரிபடைந்து வருதலாலேயே அதற்கு நன்மையுண்டாகு மெனச் சொல்ல மாட்டார்.

இனித், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்கவேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத் தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையுமென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களினாலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும், ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும், எல்லா அறிவு இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே சவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பது, யாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம்.

மேலுந், தமிழ் நெடுங் கணக்கிலுள்ள முப்பது எழுத்துக்களும் முப்பது ஒலிகளுமே மக்களுக்கு இயற்கை யாகத் தோன்றக்கூடியவையென்றும், முப்பது தமிழொலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/201&oldid=1585801" இலிருந்து மீள்விக்கப்பட்டது