உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

167

தமிழ்மொழியோ பழைய நாளில் ஒரு சிறு கூட்டத்தவ ராற் பேசப்படாமல், இவ்வுலக மெங்கணும் பரவியிருந்த பெருந்தொகையினரான நாகரிக நன்மக்களால் வழங்கப் பட்டதாகும். பண்டைத் தமிழ்மக்கள் உழவு, வாணிகம், கைத்தொழில், போர்த்தொழில் முதலிய எல்லாத் துறைகளிலும் ஒப்புயர்வின்றி ஓங்கிப்பொலிந்தமையால், அவர்களை அலைப்பாரும் அவர்கள் வழங்கிய அவர்கள்வழங்கிய தமிழ் மொழியை அலைத்துச் சிதைப்பாரும் அந்நாளில் ராயினர்.

இனித், தமிழோ காலங்கடோறுந் தன்னியல்புக்கு மாறாகத் திரிபு அடைந்துவராத மொழி. தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றிய தென்று கட்டுரைத்துச் சொல்லல் இயலாதாயினும், அதன் பழமையை வரலாற்று முறையில் ஆராய்ந்து பார்க்குங்கால். அஃது எகிப்தியர் காலத்திற்கும் முற்பட்டே சிறந்து வழங்கிய தொன்றாகக் காணப்படுகின்றது. இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு இதுகாறும்வழங்கி வருவதாகிய தொல்காப்பிய மென்னும் அருந்தமிழ் நூலை உற்று ஆராயுங்கால் தொல்காப்பியத்திற்கு முன்னமே எத் தனையோ பல சிறந்த தமிழ்நூல்கள் இருந்திருக்க வேண்டு மென்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வளவு பழமையான காலத்திலே எழுதப்பட்ட நூல்கள் இப்போது முழுதும் தமக்குக் கிடையாவிடினும் அவற்றிற் சிலசில பகுதிகளும், தொல்காப்பியம் முழுமையுற் தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த பல முழு நூல்களும், அவற்றிற்குப் பின்னே வந்த “பத்துப் பாட்டும்” “எட்டுத் தொகை” பதினென் கீழ்க்கணக்கு” முதலான பழைய தமிழ்நூல்களுந் தொடர்பாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு நூல்களையும் சிறிது உதவிகொண்டு நாம் எளிதிற் கற்றறியத் தக்க நிலையில் இருப்பதை உணர்ந்து பார்க்குங்கால், நம் முன்னோர்கள் நமது தமிழ் மொழியை எவ்வளவு பாதுகாத்துத் திரி படையாமலும், பிறமொழிச் சொற்கலவாமலும் வழங்கி வந்திருக்கின்றனரென்பதை அறியலாம். பெரும்பான்மை யான இந்நூல்கள் திரிபடையாத தமிழில் எழுதப்பட் டிருத்தலினாலேதான், இப்போதும் நாம் அவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/200&oldid=1585799" இலிருந்து மீள்விக்கப்பட்டது