உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

என்றும்,

மறைமலையம் 19

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவ னடிசேரா தார்

(குறள் 10)

என்றும் அவர் அருளிச் செய்திருக்கும் குறட்பாக்களே அதற்குச் சான்றாகும். உலகம் பொய்யென்னும் கொள்கை யுடையராயின் “ இல்லாதவற்றை இருப்ன வென்றுணரும் என்று கூறியிருப்பர். இறைவனே யானென்னும் மாயா வாதக் கொள்கை அவர் நூலில் ஒரு சிறிதுங் காணப்பட வில்லை.

இனி, ஊழ்வினையும் மறுபிறப்பும் உண்டென்று அவர் தமது திருக்குறளிற் பல விடங்களிலும் வற்புறுத்தி யிருத் தலால், ஊழ்வினையும் மறுபிறப்பும் இல்லையென்று சொல்லுங் கிறித்துவர் மகமதியரும் ஆகார். மேலும், உயிர் களைக் கொல்லாமையும் ஊனுண்ணாமையும் அவரால் மிகவும் வற்புறுத்திச் சொல்லப்பட்டிருத்தலால், உயிர்க் காலை சய்தலையும் ஊனுண்ணுதலைங் குற்றமாக நினையாத கிறித்துவ மகமதியக் கொள்கை அவர்க்குச் சிறிதும் உடன்பா டன்றென்பது தெளியப்படுகின்றதன்றோ?

இனி, வேள்வியில் உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தேவர்களுக்குப் பலியூட்டுதலால் துறக்கத்தை யடையலாமென்றுங், கடவுள் முகத்தினின்று பார்ப்பனருந், தோளிலிருந்து அரசருந், தொடையிலிருந்து வணிகரும், அடியிலிருந்து சூத்திரந் தோன்றினமையால் மக்களுட் பிறப்பிலேயே வேற்றுமை உண்டென்றும் பார்ப்பனர் கூறுங் கொள்கையை மறுத்து,

66

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிசெகுத் துண்ணாமை நன்று”

என்று கொல்லா அறத்தின் மேன்மையும்,

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

(குறள் 259)

செய்தொழில் வேற்றுமை யான்'

(குறள் 972)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/205&oldid=1585806" இலிருந்து மீள்விக்கப்பட்டது