உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

173

என்று எல்லாரும் பிறப்பளவில் வேறுபாடில்லா திருத் தலையும்,

“அந்தண ரெனிபோர் அறவோர்"

ஆதலையும் ஆசிரியர் வற்புறுத்திச் சொல்லியிருத்த லால் அவர் பார்ப்பனக் கொள்கையைச் சேர்ந்தவரும் ஆகார். இனி, மக்களுக்கே பிறவி உண்டென்றும், இறைவன் பிறவி எடாதவனென்றும், தந்திருவடிகளைச் சேர்வார்க்கும் பிறவியை ஒழிப்பவனென்றும் ஆசிரியர்,

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்”

சொல்லுதலின்,

எனத் திருக்குறளிற் கட்டுரைத்துச் இறைவனுக்குப் பத்துப் பிறவிகள் கற்பிக்கும் வைணவ மதமும் அவர்க்கு உடன்பாடன்று, மேலும், இவர் இன்பத்துப்பாலிற் கூறுங் காம இன்ப நுகர்ச்சிக்குத் திருமாலுலகின் இன்ப நு கர்ச்சியினை உவமையாக எடுத்துக் காட்டுதலால் மன மொழிகளுக்கு எட்டாத இறைவன் அருளின்பத்தைப் பார்க்கிலுந் திருமாலுலகின்பந் தாழ்ந்ததொன்றாகவே கருதினாரென்பது

இனிது விளங்குகின்றது.

ஆகவே, உலகத்தின்கணுள்ள மேற்கூறிய மதத்தவர்க ளெல்லாருந் திருவள்ளுவர் திருக்குறளைத் தத்தமக்குரிய பொது நூலாகக் கைக்கொண்டு பாராட்டுவரென்று தாங்கள் சொல்லுவது பொருந்தாததா யிருக்கின்றது. அங்ஙன மானால், எல்லா மதத்தவரும் திருக்குறளைத் தத்தம் நூலாகக்கொண்டு பாராட்டுவரென்று பழைய தமிழ்ப் புலவரொருவர் கூறியது ஏனென்றால், ஒவ்வொரு மதத்திலும் உள்ளாரில் உண்மை காணும் விருப்பமும் முயற்சியுமுடைய நடுநிலையாளர் இருப்பராதலால், அவர் தம் மதத்துக்கு ஆகாத கொள்கைகள் திருக்குறளில் இருந்தாலும், அக் கொள்கைகள் எல்லாருந் தழுவத்தக்க மெய்ம்மை உடையன வாயுந் தம் மதக் கொள்கைகள் அம் மெய்ம்மை இல்லா தனவாயும் இருத்தலை ஆராய்ந்து காண்பராதலின், அத் தகையவர்களே திருக்குறளைப் பாராட்டுவர் என்பதே அந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/206&oldid=1585807" இலிருந்து மீள்விக்கப்பட்டது