உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் 19

நல்லிசைப் புலவரின் கருத்தாகும். கொல்லாமை, புலா லுண்ணாமை ஆகிய திருவள்ளுவரின் கொள்கைகள், அக் கொள்கைகட்கு மாறான கிறிஸ்துவ, மகமதிய, பௌத்த, நாத்திக மதத்தவர்களில் நடுநிலையாளரால் இக்காலத்தில் தழுவப்படுதல் எவரும் அறிந்ததேயாகும்.

என்று

னி, மேற்கூறிய மதங்களுள் ஒன்றனிடத்திலுஞ் சேராத திருவள்ளுவர், சைவ சமயத்துக்கே உரியவர் என்பது எதனாலெனிற், சைவர்கள் பிறப்பு இறப்பு இல்லாத ஒரு முழுமுதற் கடவுளையே வணங்குதல் போலத் திருவள்ளு வரும் வணங்குதலாலும், உயிர்கள் எக்காலத்தும் உள்ள முதல்கள் சைவர்கள் கூறுதல் போலவே திருவள்ளுவரும் 'மன்னுயிர்' ‘மன்னுயிர்' என்று உயிர்களை அடுத்தடுத்துச் சொல்லுதலாலுஞ், சைவர்கள் ஊழ்வினை யும் மறுபிறப்பும் உயிர்களுக்கு உண்டென்று கூறுதல் போலவே அவையிரண்டும் உயிர்களுக்கே உண்டென்று திருவள்ளுவருங் கூறுதலாலும், கொல்லாமை, புலாலுண் ணாமை ஆகிய அறம் சைவ சமயத்துக்கே முதன்மை சைவமென்று அழைத்தலாற் பெறப்படுதலின் அத்தகைய கொல்லா அறத்தைத் தமது நூலெங்கும் வலி யுறுத்துத் திருவள்ளுவரும், அதனாற் சைவ ஒழுக்கமே யுடையவரென்பது பெறப்படுதலா லுஞ்,

யானவை

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்'

(குறள் 359)

என்னுந் திருக்குறளால் இறைவன் திருவருளைச் சார்ந் தார்க்கே அவரைப்பற்றிய இருவினையும் அறியாமையுமாகிய நோய் நீங்குமென்று இவர் கூறும் முடிந்த நிலை சைவ சித்தாந்த முடிந்த நிலையாதல் இத்திருக்குறளை, எடுத்துக்காட்டி அந்நிலையை விளக்குந் திருக்களிற்றுப் படியார் என்னுஞ் சைவ சித்தாந்த நூற்பாவினால் நன்கு அறியப்படுதலாலும் இவர் சைவ சமயக் கொள்கையொன்றே உடையரென்பது ஐயமின்றித் தெளியப்படும்.

ங்ஙனமாகச், சைவக் கொள்கை ஒன்றேயுடைய திருவள்ளுவர் சைவத்தின் வெளி யடையாளங்களான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/207&oldid=1585809" இலிருந்து மீள்விக்கப்பட்டது