உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

175

திருநீறுஞ் சிவமணியும் அணியாமல் வேறு எந்த மதத் தினடையாளத்தை அணியக்கூடும்? அரசன் தனக்குரிய

அடையாளங்களாக மணிமுடி கவித்துச் செங்கோல்

பிடித்தலும், அமைச்சன் தனக்குரிய அடையாளங்களாக அரசியல் நூல் கையேந்தியிருத்தலும், இல்லறத்தார் தமக் குரிய அடையாளங்களாக வெள்ளாடையுடுத்தி அணிகலன்க ளணிதலும், துறவறத்தார் காவியாடை யுடுத்து முக்கோலேந் துதலுஞ் சைவப் பெரியார் திருநீறுஞ் சிவமணியும் அணிந்து சபை வளர்த்தலும், பழைய காலத்திலிருந்தே நடந்து வருகின்றன. மற்றைச் சமயத்தாரிலும் அவர்க்குரிய அடை யாளங்களாக உள்ளவை எத்தனையோ பல, 6 வ்வடை யாளங்களை யெல்லாம் எடுத்துவிட்டுப் பிறந்த வடிவத் தோடு இருக்க வேண்டுமென்று ஒருவர் எண்ணுவாரானால், எல்லாரும் அம்மணமாகத்தான் இருக்கவேண்டும். அந் நிலைக்கு மற்றையவர்கள் தாந்தாங்கொண்ட அடையாளங் களை விடாதிருக்கையிற் சைவர்களுக்கு மட்டும் ஒருவர் அறிவு சால்ல வருவதற்குச் சைவர்கள் தாமா இளைத்த வர்கள்? அது நிற்க.

கடவுளை நெருப்புருவில் நெருப்புருவில் வைத்து வணங்கி, அந் நெருப்பினால் உள்ளும் வெளியுமுள்ள அழுக்குகள் எரிக்கப் பட்டுத் தூய்மையாவதற்கு அடையாளமாகவே திருநீற்றைச் சைவர்கள்

கையி

அணிகின்றார்கள். அத்திருநீற்றைக் லடுக்கும்போது இறைவன் எல்லா அழுக்குகளையும் எரித்துத் தூய்மை செய்கின்றான் என்னும் நினைவு எமக்கு வருதலால் அதனை அந் நினைவுக்கு அடையாளமாகப் பூசுவது குற்றமாகுமா? உலக நினைவிலேயே இழுப்புண்ணும் எமது உள்ளத்துக்குக் கடவுள் நினைவை எமக்கு உண்டு பண்ணும் வடையாளங்களுந் திருக்கோயில்களுஞ் தாழ்ந்த

சிறந்தனவல்லவா?

எண்ணங்களை உண்டு பண்ணும் அடையாளங்களாகிய கள்ளுக்கடை, கஞ்சாக் கடை, இறைச்சிக்கடை முதலானவைகளையும் இறுமாப் புக்கு இடஞ்செய்யும் ஆடை யணிகலன்களையும் நீக்குவது பொருந்தும். ஆனால், உலக நிலையாமையினையுங் கடவுள் அருள்நிலையினையும் நினைவுக்குக் கொண்டுவருந் திருநீறு முதலியவைகளை நீக்குதலால் மக்களடையும் பயனென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/208&oldid=1585810" இலிருந்து மீள்விக்கப்பட்டது