உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் 19

வ்வடையாளங்களை நீக்கினவுடனே எல்லா மதங் களும் எல்லாக் கொள்கைகளும் ஒன்றாகி விடுமா? என்று தாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

திருவள்ளுவரின் திருவுருவமானது சைவ அடையாளங் கள் உடையதாக மைலாப்பூர் திருவள்ளுவர் கோயிலிற் பழைய காலத்திலேயே அமைத்து வைக்கப் பட்டிருந்ததால், அதனை அப்படியே ஓவிய மெடுத்து அதனால் அவரை நினைந்து வணங்கும் எம்மனோரை ஒருவர் குற்றஞ் சொல்வது பொருந்துமோ? நாங்களே புதிதாக அச்சைவக் கோலத்தை அத்திருவுருவத்திற்கு அமைத்திருந்தாலன்றோ எங்கள்மீது குற்றஞ் சுமத்தலாம்? ஆனாற் பழைய நாளிலேயே அமைக்கப் பட்ட அதனை அப்படியே வைத்து வணங்கும் எம்மனோரைப் பழித்தல் அடாது. சைவ அடையாளங்களை விட்டாலுந் திருவள்ளுவர் சைவரேயாவர். வெளிக் கோலத்தைப் பற்றி எங்களுக்கு அக்கரையில்லை. கொள்கையே பெரிது. எங்கள் சைவப் பெரியாராகிய சேக்கிழார் அடிகளே “எந்நெறியில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள்” என்று எங்களுக்கு அறிவு புகட்டி யிருப்பதை, நாங்கள் மறந்தவர்களல்லேம். அது நிற்க.

L

இனித், தமிழைச் சைவப்பசை கொண்டு ஒட்டி யிருப் பதைப் புய்த்துவிட வேண்டுமென்று சொல்லுகின்றனர். புய்த்து விட்டாற் புத்தர் சமணர் முதலான எல்லாரிடத்துந் தமிழன்னை துள்ளிக் குதிப்பாளென்று கிளர்ச்சியோடு எழுதுகின்றனர். ஆனால், தமிழ் மொழியிணுண்மையோ அதனை வழங்கி வளர்த்த தமிழ்மக்களின் கொள்கையாகிய சைவத்தைத் தனக்கு உயிராய்க் கொண்டு உலவுகின்றது. அவ்வுயிரைப் போக்கி விட்டால் தமிழ் துள்ளிக் குதிப்ப தெங்ஙனம்? பண்டைக் காலந் தொடங்கித் தமிழை வழங்கின வர்களும், வளர்த்தவர்களும் சைவர்களே யல்லாமல் மற்றைய மதத்தவர்களல்லர். இடைக்காலத்து வந்த புத்தர் சமணர்கள் தமிழைக் கைக்கொண்டது தம் கொள்கைகளை அதிற் புகுத்தவே யல்லாமல் வேறன்று! கிறிஸ்துவ, முகமதியருந் தமிழைக் கையாளுவது அதில் தமது கொள்கையைப் புகுத்தவே யல்லாமல் வேறன்று. தன்மதிப்பியக்கத் தராகி ஒருவர் அதனைக் கையாள்வதும் அவர் கொள்கையை அதிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/209&oldid=1585811" இலிருந்து மீள்விக்கப்பட்டது