உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

177

புகுத்தவே யல்லாமல் வேறன்று, இவைகளை யெல்லாம் அவர் சிறிதாயினும் நினைத்துப் பார்ப்பாரானால் மொழி யானது அம்மொழியை வழங்கும் மக்களின் கொள்கைகளை விட்டுத் தனித்து நடவாதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பிற்காலத்திற் புதிய புதியவாகத் தமிழிற்புகும் கொள்கை க எல்லாம் தமிழுக்கு உரியனவுமல்ல; தமிழை வளர்க்க வந்தனவுமல்ல. அவைகளெல்லாம் தமிழை வளர்க்க வந்தன வல்ல வென்பதற்கு அக்கொள்கையினையுடையார் வட மொழி முதலான பிறமொழிச் சொற்களை அதனுள் வரை துறையின்றிப் புகுத்தி, ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற் களை வழங்க விடாமற் செய்த கொடுமையால் நன்றாக அறியலாம். மற்றுத் தமிழுக்கேயுரிய தமிழ் மக்கள் சைவர்களா யிருந்தமையால் அவர்கள் அதனைத் தூயதாகவே வழங்கி வளர்த்து வந்திருக்கின்றார்கள். அதனாற் சைவக் கொள்கை யானது தமிழுக்கு உயிர் போல்வதென்பதும், அதனை அதிலிருந்து பிரித்தல் இயலாதென்பதும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

66

ஒருவர் உண்மையிலேயே தமிழை வளர்க்கும் எண்ண முடையவரா யிருந்தால், மக்கட் கூட்டம், மக்களினம், மக்கள் தாகுதி முதலான தமிழ்ச்சொற் களிருப்ப அவற்றை யெல்லாம் விட்டு “மனித சமூகம்” என்ற வடசொல்லை எழுதுவாரா? கடலூர் வாணர் லூர் வாணர் என்னுந் என்னுந் தமிழ்ச்சொல் லிருக்கக் "கடலூர்வாசி" என்று எழுதுகின்றனர். விடை யென்னுந் தமிழிருக்கப் “பதில்” என்னுந் துலுக்குச் சொல்லை வரைகின்றனர். அவா, ஆவல், விருப்பம் என்னுந் தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை வி டு ஆசை” என்றும், சொல், கட்டாயம், ஒலி, ஓசை, மொழி, அறிவு அறிவு நூல், கலை நூல், புலவர், அறிஞர், கற்றார், நேரம், உதவி, பொருள், திருநீறு, சிவமணி, எல்லாம், ஓவியம், முறை, ஒழுங்கு, சிறிது. நினைத்து, சூழ்ந்து, ஆராய்ந்து, அன்பு, மகன், ஆண்மகன், ஆடவன், ஆள், முதன்மை, வலம் வருதல், வணக்கம் செலுத்துதல் என்னுந் தூய தமிழ்ச் சொற்களிருப்ப, இவற்றை யெல்லாம் விடுத்துப், பதம், வாக்கு, வார்த்தை, அவசியம், சப்தம், பாஷை, விஞ்ஞானம், பண்டிதர், சமயம், உப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/210&oldid=1585812" இலிருந்து மீள்விக்கப்பட்டது