உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் 19

வட

கூறுவாருரை மெய்யாகாதென்பதும், ஆகவே தென்னாட்ட வர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவிகொண்டு நாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் தென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.

யலா

இனி, இந்தி மொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப் படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு, வங்காள மொழி ஐந்துகோடி மக்களாலும், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும் பேசப்படும் பெருந்தொகை எடுத்துக் காட்டப்படும். இந்தியைப்பொது மொழியாக்க வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந் தொகையினரான மக்களாற் பேசப்படும் 'வங்காள' மொழியைப் பொதுமொழியாக்க வேண்டுமென்று வங்காளரும், இவ்விந்திய நாட்டின் நால் எல்லை வரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லார்க் கும் முதன் மொழியாவதும், இந்தியாவின் மட்டுமேயன்றி இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி, வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ் மக்கள் அனைவராலும் வழங்கப்படுவதும் ஆன தமிழையே பொது மொழியாகப் பயிலல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ? மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலன. நம்போற் பல பிறவிகள் எடுத்துழன்று இறந்துபோன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாக வைத்து உயர்த்துப் பாடி யிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம் வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மைசெய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவவழிபாட்டை அவர் அடையவொட்டாமலுந் தடைசெய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன.

மற்று, கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலான தமிழ் நூல் களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/217&oldid=1585823" இலிருந்து மீள்விக்கப்பட்டது