உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

185

தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப்பேரின்பத்திற் றிளைத் திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனிதமாக்குந் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப் போற் பழையன அல்லாமையாலும், அவற்றை வழங்கும் மக்கள் பழமை தொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ்மக்களைப் போல நாகரிக வாழ்வு வாயாதவர்களாகையாலும், சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும் பண்டு தொட்டுத் தனித்த பேரறிவு வாய்ந்த தமிழ்ப்பெரும் புலவர் போலாது சமஸ்கிருத புராணப் பொய்க் கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவின ராகையாலும், உயிர்க்கொலை, ஊனுணவு, கட்குடி, பல சிறு தெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நூல் நெறிகளைத் தழுவிய வடவர் அவற்றை விளக்கி அருளொழுக்கத்தையும் முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல் நெறிகளைத் தழுவாமையாலும், அவருடைய மொழிகளையும், அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ் மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொரு நலனும் பயனும் எய்தார் என்பது இனிது பெறப்படும்.

L

இங்ஙனம் எல்லா வகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொது மொழியாதற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்தாயிருந்தும், அதனைப் பொது மொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுக ளாகவே தோன்றிப் பழைய சிறந்த நூற் செல்வமின்றி வறியனவாய்ப் பலவகைக் குறைபாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிகமில்லா வடவர்களாற் பேசப்படும் இந்தி முதலான சிதைவுக் கலப்பு மொழிகளை இத் தேயத் திற்குப் பொதுமொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்ப தனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும். இதுகாறுங் காட்டிய உண்மைகளால் இந்தி மொழிப் பயிற்சி நந்தமிழ் நாட்டிற்கு ஒரு சிறிதும் பயன்படாமையினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/218&oldid=1585824" இலிருந்து மீள்விக்கப்பட்டது