உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

  • உரைமணிக்கோவை

211

விரோதி: தேவர் முதலிய வடசொற்கள் செந்தமிழினும் கலந்து வழங்குவனவாயின. இனி, 'இந்து மகா சமுத்திரம்’ எனப் பெயரிய மாகடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரு நிலப்பரப்பா யிருந்ததென்று நீவிர் ஓதியது பெரிதும் வியக்கத்தக்க தொன்றுகாண், ஆயினும், அதனை ஆங்கில வல்லார் கூறுமாறு பற்றி நீவிரும் எடுத்துக் கொண்டுரைத்தலின் மற்றது எம்மனோரால் தேறப்படு தகையதன்றாம், என்னை? தமிழ் நூலிலிருந்து காரண மெடுத்துக் காட்டி நிறுவாமையான் என்னும் எமக்குறுதி பயத்தற் பொருட்டுத் தமிழ்நூன் முகத்தானும் அதனைச் சிறிது விளக்கிக் காட்டுதும்.

தமிழில் மிகப் பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த 'சிலப்பதிகார’த்திற் கிளக்கப்படுவன யாவும் உண்மைப் பொருள்களா மென்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது. இளங்கோவடிகள்

வடிவே லெறிந்த வான்பகை பொறாது

அதில்

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள

ஆசிரியர்

எழு

என்றார்; இனி வேனிற் காதையில் “நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்" என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “அக்காலத்து அவர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னும் ஆற்றிற்குமிடையே நூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும் ஏழ் முன்பாலை நாடும் ஏழ் பின் பாலை நாடும் ஏழ் குன்றநாடும் ஏழ்குணகாரை நாடும் ஏழ் குறும்பனை நாடு மென்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் க ல்கொண் காண் டொழிதலாற் குமரிப் பௌவ மென்றார்”என்று கூறினார்.

இதனால், எழுநூற்றுக் காவதம் அகன்று கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/244&oldid=1585856" இலிருந்து மீள்விக்கப்பட்டது