உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் 19

கூறிய இலெமுரியா என்னும் நிலப்பரப்பே தமிழர்கள் தொன்றுதொட்டு வதிதற்கு இடமாயிருந்த தென்பதூஉம், அந் நிலப்பரப்பழிந்து படவே அதனுடனழிந்தோர் இந்தியா, மலேய தீபகற்பம், சீயம், பலுசிதானம், பாரசீகம், அராபியா, துருக்கி, கிரீசு, இத்தலி முதலான பல்வேறு வகைப்பட்ட நாடுகளின் தென்பாகங்களிற்சென்று குடியேறி அங்ஙனங் குடியேறிய நாடுகளின் ஒழுகலாற்றிற்கேற்ப நாடொறும் ஒழுக்கமும் உருவமும் மொழியும் வேறுபட்டு வாழ்ந்தார்க என்பதூஉம் இனிது விளங்கும். அதுவன்றே கடவுள்: ஒன்று : எட்டு : கொல் : ஈன் : வேறு: சுருங்குமுதற் பல தமிழ்ச் சொற்கள் பல்வேறு வகைப்பட்ட மொழிகளில் வழங்கப் படுவதூஉ மென்க. இன்னும் இதனாற் போதரும் உண்மை என்னெனின்; பண்டை நாளில் மக்கட் பரப்பென்பது இரண்டு கூறுபட்டு, ஒன்று வடக்கே காந்தினேவிய தீபகற்ப முதலான இடங்களில் வதிய, ஏனையது தெற்கே இலெமுரியா என்னும் பெருநிலப்பரப்பில் வதியப் பின் வடக்கிலுள்ள காந்தினேவிய முதலான இடங்கள் தட்பமிகுந்து உயிர் வாழ்வதற்கு அரிதாய் மாறினமையால் ஆண்டுறைந்த ஆரியர் தென்றிசை நோக்கிப் பன்முகமாய்ப் பரந்து போந்தும் தெற்கிலுள்ள இலெமுரியா என்னும் நிலப்பரப்பு வெள்ளங் கொண்டழிதலின் ஆண்டிருந்தோர் வடதிசை நோக்கிப் பன்முகமாய்ச் சென்றும் ஒருவரோடொருவர் விராய் ஒருவர் மொழியை யொருவர் கற்று ஒருவர் ஒழுக்கத்தை யொருவர் தழீஇ ஒருவரையொருவர் வெற்றிகண்டு ஒருவர் ஒருவரை யாண்டு இவ்வாறெல்லாம் ஒன்றுபட்டு வேறு பிரித்துக் காணப்படா நீர்மையராயினாரென்பதாம்.

இங்ஙனம் இவ்விருவேறு மக்கட் பகுதிகளும் ஒருங்கு கூடி ஒன்றாய்ச் சமைதலின், மக்கட் பகுதிகளும் ஒருங்குகூடி ஒன்றாய்ச் சமைதலின், தாமரை : மீன்: அடவி : நீர்: தீ: காலம் : உலகம் : மணி : முத்து : மென்மை : கருமை : திண்மை : வன்மை : வண்மை: பசுமை: கருமை: தண்மை: கவான்: ஊன்: அவை: அந்தி: சுண்ணம்: வண்ணம்: பீழை: MN: பகு : சுடு: கட்டு: தள்: மிகு: சால்: பற முதலிய செந்தமிழ்ச் சொற்கள் வடமொழியினும், சூரியன் : சந்திரன்: அமிழ்தம்: காரணம்: எந்திரம்: சீக்கிரம்: குங்குமம்: சமுத்திரம்: கருமம்: அற்புதம்: பசு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/243&oldid=1585855" இலிருந்து மீள்விக்கப்பட்டது