உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

  • உரைமணிக்கோவை :

209

களில் வழங்குதலும், தலைச்சங்கமிகுந்த காலமும் கடைச் சங்க வரலாறும் ஈண்டெடுத்துக் காட்டி நிறுவியவ்வாற்றா னாசிரியர்-நக்கீரனார் காலமுங் காட்டுதும்.

இனி, இப்போது இந்து மகா சமுத்திரம்'என மிகப் புகழ்பெற்று விளங்கும் மாகடல் பல்லாயிரவாண்டுகளுக்கு முன் நிலனாயிருந்த தென்பது ஆங்கில நூல் வல்லார்க்கு இனிது விளங்கும். அவர், பல வேறு வகைப்பட்ட நாடு களிலுள்ள மக்களின் உருவமைப்பும் உறுப்பமைவும் ஒத்துநோக்கி அவர்தம் முன் இனங் கண்டுரைப்பதாகிய 'மக்களின நூலானும், இயங்கியற் பொருள் நிலையியற் பொருள்களைப் பகுத்துககொண்டு ஆராயும் நூல் களானும், அவ்விந்துமகா சமுத்திரத்திலுள்ள சில தீவுகளிற் கண்டெடுக்கப்பட்ட தமிழெழுத்துக்க ளெழுதிய செப்பேடு கள் கருங்கற்களானும் கிழக்கே சந்தாத்தீவுகள் வரையிலும் மேற்கே மடகாசிகர் தீவுவரையினும் அகன்று கிடந்த இலெமூரியா என்னும் நிலன் ஒருகாலத்தெழுந்த பெரு வள்ளத்தால் ஆழ்ந்து ஆழ்ந்து போயிற்றென்றும், இங்ஙனம் ஆழ்ந்துபோன பெருநிலன் இந்நிலவுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும் பரப்பாகலான் இறைவனாற் படைக்கப்பட்ட மக்கள் முதன் முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து போய் வேறுபட்டன ரென்றும், அவ்வாறிதிலிருந்த தொல்லோர் வழங்கிய மொழி தமிழ் மொழியா மென்றும் பொருளினிது விளங்கச் சொல்லுந் தோறும் காரணங்காட்டி நிறுவி விளக்குவர்.

இனி வேறொருசாரார் ஆரியர்கள் ஆ முதன்முதற் காஸ்பியன் க லையடுத்த இட ங்களிலிருந்து பின் பன் முகமாகப் பரந்து சென்றார்களென்பர். இனிப் பிறிதொரு சாரார் ஆரியர்கள் காஸ்பியன் கடலையடுத்த இடங்களில் முதன் முதலிருந்தார்களென்பார் மதத்தை மறுத்து, காந்தினேவிய தீப கற்பத்தின் தெற்கில் முதன் முதலிருந்து பன்முகமாகப் பிரிந்து சென்றார்களென்பர். அவ்வாறவர் கூறுமாற்றான் ஆரியன் முதன் முதலிருந்து பின் பிரிந்த இடமாத்திரம் பெறப்படுமாமன்றித் தமிழர்களுக்கும் உலகத்திலுள்ள எல்லா மாந்தருக்கும் அஃதே இடமா மென்பது அதனாற் போதராமையின் யாம் முற்கிளந்து

பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/242&oldid=1585854" இலிருந்து மீள்விக்கப்பட்டது