உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 19

கொண்டொழுகும் மாக்கள் நிறையப்பெற்ற ஏனை நாடு களை ஒப்பிட்டு, அவ்வொய்ப்புமையால் இச்செந்தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரிய பெரிய வியத்தகு நிகழ்ச்சிகளைப் பொய்யென்று நினைந்தொழுகுவார்க்கு நல்லறிவு கொளுத்தி அவரைச் செந்நெறிக் கடாவுதல் ஒருவாற்றானுஞ் சாலாத தான்றாமென ஒழிக.

கும

திருஞான சம்பந்தர் முதலான அருட்டிருவாளருந் தாந்தாம் நிகழ்த்திய அற்புதங்களையும், இறைவன் தமக்குச் செய்யும் அருட்பாடுகளையுந் தாமே தத்தஞ் செய்யுட்களில் அமைத்துக் கூறுதலும், அதனைப் பிற்காலத்தறிவுடை ந ன்மக்கள் பலரு மெய்யெனத்தேறி நன்கு மதித்தலுங் காண்க. இறைவன் தன்னடியார் பொருட்டு இயற்றிய திருவிளையாடல்களும், திருத்தொண்டர் பிறருய்யும் பாருட்டு அவ்விறைவன் அருள்வழி நின்று நிகழ்த்திய பேரற்புதங்களும் இச்செந்தமிழ் நாட்டிற்போல வேறு பிறவற்றில் நிகழக்காணாமையான் வேற்று நாட்டிலுள்ள மாக்கள் இன்னோரன்னவற்றைக் கேட்டலும் பெருநகை புரிந்து எள்ளுவர். அது பற்றியவர்க்கு இரங்குவதேயன்றி அவரை யிகழார் பெரியோ ரென்பது. யாவராயினுமாக, இறைவன் ஒரு திருவிளையாடல் புரிந்தானென்றாதல், ஒரு திருத்தொண்டர் ஒரு பெரும் புதுமை நிகழ்த்தினா ரென்றாதல் கேட்டுழிக் கதுமென எள்ளி நகையாடாது அங்ஙனம் நிகழ்ந்ததனுண்மையை ஆராய்ந்துணர்தல் அவர்க்கு இன்றியமையாததா மென்பது கடைப்பிடிக்க.

ரு

இனி யொருசாரார் திருவிளையாடற் புராணத்தையே கருவியாகக் கொண்டு தமிழ்ச் சங்கமென வொன்றில்லை யெனவும், காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தை நோக்கித் தமிழ்ப்புலவர் புனைந் தெடுத்துக் கட்டிய கட்டுரை ர யதுவாமெனவும், தமிழ்ப் புலவர் பொய்யும் புளுகும் புனைந்துகொண்டுஅரசரை இரந்து பரிசு பெற்றுண்டு நாட்கழிக்கும் மிடிபடு வாழ்க்கைக் கையறியா மாந்தரெனவும், அவர் கூறுமாறுபோலத் தமிழ் அத்துணைப் பெருஞ் சிறப்பினதும் தொன்றுதொட்டது மன்றாமெனவுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இளி வரக் கூறிப் பெரிது மார்த்தலின், அவருரை புரைபடு முகத்தாற் றிமிழின் றொன்மையும், தமிழிலிருந்து பல சொற்கள் வேறு மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/241&oldid=1585853" இலிருந்து மீள்விக்கப்பட்டது