உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

  • உரைமணிக்கோவை :

66

207

இன்

யாற்றவுநீ செய்யுமருள்" எனவும் அவர்தாமே கூறுமாற்றாற் றெளியக் கிடத்தலானும், இறைவன் றமக்குக் கட்டளை யிட்டவாறு கயிலைகாணச் கயிலைகாணச் செல்லு நெறியின் மலை முழையில் தாம் சிறை புகுத்தப்பட்டுப் பின் செவ்வேள் திருவருளால் அதனினின்று மீண்ட முறைமை றெம்மைக், கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பின் மீட்டதுவு, மெய்விடா வீரன்கைவேல்” என்றவர் ‘திருமுருகாற்றுப் இறுதிவெண்பாவிற் பொதுப்பட வைத்துரைப்பதன் கட் பெறப்படுதலானும், தாங் கயிலைகாணச் சென்றமை முற்றுப்பெறாது வியத்தகு பரிசாற் காளத்தியையே அது வாகக் காணும்படி நேர்ந்த பெற்றிநோக்கி அவ்விரண்டற்கும் ஒற்றுமை கொளுத்திக் “கயிலைபாதி காளத்தி பாதியந்தாதி” அருளிச் செய்ததனால் அவ்வுண்மையறியக் கிடத்தலானும் அவ்வரலாறு முழுவதூஉம் மெய்ப்ப நிகழந்ததா மென்பது ஐயுறவின்றி நிலையிட்டுரைக்கப்படு மெனக்கொள்க.

இனி, இறைவன் றிருவுருக்கொண்டு நக்கீரனார் விழியெதிர் தோன்றினா னெனவும், பின் அவரோடு வழக்காடி மறைந்தானெனவுங் கூறுவனவெலாம் யாண்டும் இயற்கையின் நடவாச் செயற்கையாதலின் மற்றிவையெல் லாம் மெய்த்திறங்கொண்டு நிகழாப் பொய்ப் பொருள்களா மென்று வேறொரு சாரார் தமக்குத் தோன்றியவா றெல்லாம் பிறழக்கூறி நலமுறார், ஆசிரியர் நக்கீரனார்தாமே அங்ஙனம் நிகழ்ந்தவற்றையெல்லாம் இனிதெடுத்துக் கூறுதலின், அப்பெற்றியார் கூறும் அறிவில்லுரை வறிதாய்ப் போலிப்படு மென்பது நல்லுணர்வுடையார் உணர்ந்து கொள்வரென விடுக்க, அல்லதூஉம், மக்கட்பிறவியின் உறுதியுணர்ந்து உலக

வாழ் க் கை அலரலொழிந்து அவை மாறிமாறிவரும்

இயல்புணர்ந்து கழித்துத் தம்முயிர்க்கு நீங்கா நிலைக்களனா யுள்ள துளக்கறும் பொருளியல்பு அறிந்து அப்பொருட் செயலினும் அறிவினுந் தஞ்செயலும் அறிவுத் தோய்ந்து ஒரு பெற்றிடையேயொரு பேரின்ப நுகர்த்தமைய நினைந் திருக்கும் அறிவுடை நன்மக்கள் பண்டைநாட் டொடங்கி இன்றளவும் நிலவப்பெற்ற இச்செந்தமிழ் நாட்டொடு, அப்பிறவியின் உண்மைப்பயனறியாது தம் வாணாள் முழு வதூ உம் உலகவாழ்க்கையில் அழித்து வேறோருறுதி நாடாது, அங்ஙனங் கழித்தலையே தமக்குப் பெருமதிப்பாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/240&oldid=1585852" இலிருந்து மீள்விக்கப்பட்டது