உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் 19

எனப்

வைத்துக் கூறுவதன்றி “நக்கீரர் தாமுரைத்த” என்றுயர்த்துக் கூறுதல் ஏலாமையானும், அவர் தம்மை யங்ஙனம் உயர்த்துக் கூறாரென்பது "சிறியேன் சொன்ன வறில்வாசகம் பிறாண்டும் அவர் கூறுமாற்றால் தெளியக்கிடத்தலானும் அவை பிற்காலத்தாரால் நூற்சிறப்பாக எழுதப்பட்டனவா மென்பது இனிது விளங்கும். அல்லதூஉம், ஆசிரியர், நக்கீரனார் கூறிய ரண்டு செய்யுட்களில்இறுதிச் செய்யுளினிறுதியிற் கிடந்த “மெய்விடா வீரன்கைவேல்” எனுஞ் சொற்றொடரிலுள்ள 'வீரவேல்' எனுமொழிகளை வேறுபிரித்தெடுத்துக் கொண்டு ‘வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட” என்று தொடங்குதலானும், ஏனையொன்பது செய்யுட்களும் அங்ஙனம் அந்தாதித் தொடைப்பட நிகழாமையானும் முன்னிரண்டு செய்யுட் களும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றினவா மென்பதூஉம், பின்னெட்டும் பிற்காலத்தார் இயற்றினவா மென்பதூஉம் தெற்றென உணரப்படுமென்பது.

66

இனி, இங்ஙனம் ஆசிரியர் நக்கீரனார் வரலாறு பல நூல்களில் ஒன்றோடொன்று மலைவுபட நிகழ்த்தப்படு தலின், மற்றது முழுவதூஉம் பொய்படும் போலுமென நினையற்க. ஆசிரியர் தாம் இறைவன்றந்த "கொங்குதேர் வாழ்க்கை எனுஞ் செய்யுட்குக் குறைகூறிய தங்குறு மொழியைப் பொறுத்தருளுமாறு 'திருவெழுகூற்றிருக்கை யிற் “சிறியேன் சொன்ன வறிவில் வாசகம், வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்” எனவும், ‘பெருந்தேவபாணி”யிற் கூட 6 லால வாய்க்குழகனாவ, தறியா தருந்தமிழ் பழித்தன னடியேன்” எனவும் “எம்பெருமான் வேண்டியது வேண்டா, திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன்” எனவு ங் குறையிரத்தலானும், இவை யெல்லாம் நிகழ்ந்தவிடம் மதுரைமாநகரென்பதூஉம், இறைவன் விழித்த நுதற்கண் வெப்பம் தம் மெய்யிற்பற்றி எரிவு செய்ததென்பதூஉம், 'திருவெழு கூற்றிருக்கை' இறுதி வெண்பாவில் " ஆலவாயி லமர்ந்தாய்- தணிந்தென்மேன், மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே" எனவும், ‘பெருந்தேவபாணி' இறுதி வெண்பாவில் என்மேற், சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே,

66

கூறிக்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/239&oldid=1585851" இலிருந்து மீள்விக்கப்பட்டது