உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

7. தமிழ்விடுதூது முகவுரை

'தமிழ் விடு தூது' என்னும் இந்நூல் இதன் ஆக்கி யோரால் திருவாளர் இரத்தினம் பிள்ளை யென்னும் வள்ளல் தமக்காற்றிய நன்றி பலவும் பாராட்டுதல் காரணமாய்த் தமிழ் நலம் துலங்க இயற்றப்பட்டது. செந்தமிழ் வன்மையிற் சிறந்து விளங்கிய கல்விமான்கள் பலரையும் போற்றி உதவி செய்த தமிழ் விழைவுப் பேராண்மைபற்றித் தமிழ்த் தெய்வத்தையே அவ்வள்ளல்பாற் றூதுவிடுத்தற்கு அமர்ந்தனர் இதன் ஆக்கியோர்; இஃது அவர் இந்நூற் காரணப்பெயர் உரைக் குறிப்பின் கண் உரைக்குமாற்றால் நன்கறியப்படும்.

இனி இந்நூலின்கண் இதன் ஆக்கியோர் செந்தமிழ் னி இயல்நுட்பந் தொகுத்த தொல்காப்பியப் பேரிலக்கண வரம்பு வழாதும் செந்தமிழ் ஆக்கஞ் சிதையாது விளங்கிய சந்தச் சங்க விழுமிய இலக்கிய மரபு பிழையாதும் சொல்நுட்பம் பாருள் நுட்பம் நனிதுலங்க இயல் இசை நாடகத்தமிழ் ரிவாய் எடுத்துக் கூறியன பல. இதனைக் கற்கு மாணாக்கர் இதன் முதற்பாகப் பொருட்டொடர்பு இனிதறிந்து கோடற் பொருட்டு, அதனை வகுத்துக் காட்டி ஈண்டு ஒரு சிறிது சுருங்க விளக்குவாம்.

இந் நேரிசைக் கலிவெண்பாவின் முதற்பதினாறு வரி களில் நாமகளை விளித்து முன்னிலைப்படுத்தி, மேல் முப்பத்திரண்டு வரிகாறும் அவள் உருவங் கற்பிக்கப் படுகின்றது. செழுமிய தமிழ்மொழியே நாமகள் தலையாம்; அம் முகத்து இருவிழிகளே எண்ணும் எழுத்துமாம்; இரு செவிகள் கந்தருவப் பாட்டும் தமிழ்ப் பாட்டுமாம்; அணிநா தமிழ்ச் சொல்லேயாம்; முகிழ் நாசி தருக்கநூற் பயனேயாம்; மற்றை யுறுப்புகள் மற்றைத் திசையில் வழங்கும் மொழி களேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/246&oldid=1585858" இலிருந்து மீள்விக்கப்பட்டது