உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் 19

6

இனி 33ஆவது வரிமுதல் நாமகளாம் ஞான முதல்வியின் றிருமேனிப் பொலிவினை பாலிவினை எடுத்து விரிக்கின்றுழி, அஃது இயற்கை, செயற்கை, கற்பனை என்னும் முத்திறப்பட்டு விளங்கு மென்றார். எனவே, அந் நாமகளோடு மிக ஒற்றுமையுற்றுக் கிடக்குங் க்குங் காரண. உடலாம் இயற்கைத் திருமேனியும் அதன்மேல் உறையாய்ப் பொதிந்து அதனால் நடைபெறும் பெற்றித்தான நுண்ணுடலாகும் செயற்கைத் திருமேனியும், அந் நுண்ணுடலின் கவிப்பாய் அதன் நிகழ்ச்சிகளைக் கசிந்துருகும் அன்பர்க்கு எளிது புலப்படுத்தும் பருவுடலாம் கற்பனைத் திருமேனியும் ஈண்டுக் கூறியவறாயிற்று, இவை மூன்றனுள் நாமகட்கு இயற்கைத் திருமேனியாதற்குரிய கிழமை பெரிதுடையது தமிழ்மொழியொன்றேயா மென்றார். என்னை? படைப்புநாட் டொடங்கி மக்கள் இயற்கையான் வழங்கத் தோற்றமுற்றெழுந்து, ஏனைப் பண்டை மொழிகளெல்லாம் வழக்கு வீழ்ந்து இறந்தொழியத் தான் என்றும் ஓரியல்பினதாய்க் 'கன்னித் தமிழ்' என்னும் பெயர் பூண்டு நடைபெறுதலின் என்க. பண்டை மொழிகளான இலத்தீன், கிரீக்கு, ஆரியம் முத லாயின இறந்துபடவும், அவற்றிற்கும் முற்பட்டுத் தோன்றிய தமிழ் சிறிதும் வடுப்படுதலின்றி இன்றுகாறும் நடைபெறல் அஃது இலேசிலே கூறப்படுதற்குரிய ஓசைமைதியும், பிற நலங்களும் பொருந்தப் பெற்றமையினாலேயாம். இதுபற்றி யன்றே தாமியற்றிய மனோன்மணீய நாடகக் காப்பியத் தமிழ்த் தய்வ வணக்கத்தில் தத்துவநூற் பண்டிதர், சுந்தரம்

பிள்ளையவர்கள்,

“பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”

என்று நன்கெடுத்துக் கூறினார். இன்னும் தமிழ் ஒன்றே எல்லா மொழிகளினும் ஓசைநலமும் முதல் தோற்றமு முடைத்தென்பது எமது ஞானசாகரப் பத்திரிகையின் முதற்பதுமத்தில் “தமிழ் வடமொழியின்று பிறந்ததாமா?” 'தமிழ் மிகப் பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/247&oldid=1585859" இலிருந்து மீள்விக்கப்பட்டது