உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

99

மொழியாமென்பது’ என்னும் உரைகளில்

215

மிகவிரித்து

விளக்கினாம். அவையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இம் முகவுரை மிக விரியுமென வஞ்சி விடுத்தாம். இது நிற்க,

இனி நாமகட்கு நுட்பச் செயற்கையுடலாவது இது வென்று 45ஆவது வரிமுதல் விளக்குவான் புகுந்தனர். தமிழ் மொழியின் திரிபாய் அவ்வந் நாடுகளிலிருந்தோர் தமக்கு இசைந்தவாறு இயற்றிக் கொண்ட குடகம், தெலுங்கம், கன்னடம், துளுவம் என்னும் செயற்கை மொழிகளே அவ்வம்மையின் செயற்கையுடம்பாம்.

க்

ம் மொழிகளில் தமிழ்ச் சொற்களும் வடசொற்களும் ஒருங்கு விரவிக் கிடத்தல் கண்கூடா யறியப் படுதலின், இவை தம்மைத் தமிழ்த் திரிபெனவுரைத்தல் பொருந்தாதாம் பிற வெனின்; அற்றன்று, ஒன்று மற்றொன்றனோடு முடைத்தாதல் அவையிரண்டன் பொதுமைக் குணத்தாற் றெளியப்படுமென்பர் தருக்க நூலாருமாகலின் இம்மொழி களின் முதல் தோற்றச் சொற்களைத் தமிழோடும் ஆரியத் தோடும் புடைபட வைத்து ஆராய்ந்துணர வல்லார்க்கு அவை தமிழ் முதல்தோற்றச் சொற்களோடு இயைபு மிகவுடைய வாதலும் ஆரிய முதல் தோற்றச் சொற்களோடு இயைபு சிறிது முடையவாகாமையும் இனிதறியக் கிடக்குமாதலான் அவை தமிழ்த் திரிபென்றல் பொருத்தமேயா மென்றுணர்க. அவை தமிழ்த் திரிபாயவாறு யாங்ஙன மெனிற் கூறுதும். பண்டை காலத்தில் ஓரிடத்திருந்து ஏனையோரிடத்திற்குச் சேறல் இக்காலத்திற்போல எளிதன்று. அது பற்றி அவ்வந் நாடுகளிலுறைந்தோர் தத்தம் ஒழுகலாற்றிற்கு இசைந்த நெறியால் சொற்கூறுதலும் சொல்லைத் திரித்து வழங்கு தலுஞ் செய்து போதருவர்; இவர்இங்ஙனந் திரித்து வழங்கு மாறு அறியாத மற்றை நாட்டிலுள்ளார் தாமுந் தம்மியற்கை யால் அங்ஙனமே வழங்கப் பல நூற்றாண்டுகள் கழிதலும் அவ்விருவேறு நாட்டு வழக்கும் மாறுபடுவ வாயின. நாடு மிக விலகியிருக்குமேல் ஆண்டு நடைபெறும் மொழி வழக்கும் மிக வேறுபட்டுக் கிடக்கும்; நெருங்கி யிருக்குமேல் அவ்வேறு பாடு அருகுமென்றுணர்க. நீராவிப்பொறி உதவி பெற்று நாட்டுப் பயணம் எளிது முடியும் இஞ்ஞான்றும் நாட்டு வழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/248&oldid=1585860" இலிருந்து மீள்விக்கப்பட்டது