உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 19

ஒன்றோடொன்று முரண்படுதல் காண்க. இவ் விரிவெல்லாம் ஞானசாகரத்தில் போந்தாம். ஆண்டுக்

கண்டுகொள்க.

விளக்கிப்

னி அவட்குக் கற்பனைப்பருவுடலானது இயற்கை மொழியான தமிழினும் செயற்கை மொழிகளான குடகந் தெலுங்கம் முதலியவற்றினும் பல சொற்கள் பொறுக்கிக் கசடதப முதலான மெய்யெழுத்துக்களை எடுத்தும் படுத்தும் நலிந்தும் வேறுபடவைத்துப் பல நாட்டினரும் ஒருங்கு சேர்ந்து ஒரு மொழியா யியற்றிய பாலி மொழியாமென்பது. இது பெரும்பாலும் புத்தசமயம் மிக விரிந்து பரந்த ஞான்று, அச் சமயத்தைப் பின் பற்றியோர் பல்நாட்டினரும் அச் சமய ஒழுக்கநெறிப் பொருள் திரிபின்றி உணர்ந்து கோடற் பொருட்டு அச்சமயப் பற்றுடையவர்களாய் விளங்கிய பௌத்த மன்னர்கள் தோற்றுவித்து வழங்கியதான்றாம், கோசலநாடு மிகப் பெரிதாய் வளர்ந்து ஒரு பெருவேந்தன் ஆணைவழி நின்றகாலத்துப் பாலிமொழி மிகப் புகழ் பெற்று வழங்குவதாயிற்றென்றும், அப்போது திருத்தமான வடமொழி தோன்றி நடைபெறவில்லை யென்றும், இவை முற்றும் நன்காராய்ந்த பாலிமொழிப் பண்டிதர் இரைஸ் டேவிட்ஸ் இனிது நிறீஇ வரைந்த அரிய வரலாற்று வரையும் வ் வுண்மையினை வலியுறுத்துமாறு கடைப்பிடிக்க.*

மற்று இப் பாலிமொழியும், தமிழ் குடகம் முதலான மொழித்துணையாற் கட்டப்பட்டுத் தோன்றி நடைபெற லாயிற் றென்னும் உண்மையும் அப்பண்டிதர் நன்கு விளக்கிக் காட்டினார். இந் நுட்பங்களெல்லாம் இந் நூலின்கண் இதன் ஆக்கியோர் முன்னரே ஆராய்ந்து கூறிய அறிவுவன்மை மிகவும் வியக்கற்பாலதேயாம்.

புத்தசமய

இம்

வளர்ச்சியே மொழியின் தோற்றத்திற்கு ஒரு பெருங்காரணமாயிற்றென்று ஆக்கியோர்,

"ஆதியிலே போதி யடியிருந்த வாமனார்

நீதி நெறியருளின் நின்றளிக்க- மேதினியில் எங்கும் பரந்தெண் ணிடவே றிடனின்றித் தங்கும் பலமொழிமாந் தர்தொடர்ந்தே-துங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/249&oldid=1585861" இலிருந்து மீள்விக்கப்பட்டது