உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

உலகமூ லம்மொழியென் றொன்றும் பொருளா லிலகுமொழி பாலியா மென்பர்”

என்று உரைக்குமாறு நினைவுகூரற்பாலதாம்.

217

இனி 81ஆவது வரிக்குமேல் இப்பாலிமொழியினின்றும் பல மொழிகள் எழுந்தனவென்றுரைத்து, அங்ஙனமெழுந்த பலவற்றுள்ளும் வடமொழி கலைமகளுக்கு மேகலைபோல் வதாமென்று புனைந்திடுகின்றார். நான்மறை வழங்கும் ஆரியமொழியும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் னழுந்த சமக்கிருத மொழியும் தம்முள் வேறுபாடு மிக வுடையனவாம். பின்னெழுந்த சமக்கிருதமொழி எல்லா வமைதிகளும் பொருந்தத் திருத்தப்பட்டு நூல்வழக்காய் மட்டும் நடைபெறுவது. இதற்கு முன்னையதான ஆரியமொழி வேறுபட்ட இலக்கணமுடைத்தாய், ஆரியர் வடமேற்கு நாடுகளிலிருந்து சிந்துநதிக் கரையிற் குடியேறியகாறும் சொல்வழக்காய் நடைபெற்றுப் பிற்றைஞான்று இறந் தொழிந்தது. ஆரியமொழி இந்தியநாட்டிற் புகுதன் முன்னரே தமிழரும் கொலேரியரும் இருந்தனர். புத்தசமயம் விரிந்த பொழுது தமிழினும் பிறவற்றினும் இருந்து பாலிமொழி தோன்றியது. பின் புத்தசமய மொடுங்கி ஆருகதம் தலையெடுத்து விளங்கியஞான்று. ஆருகதர் தஞ்சமயத்திற்குச் சிறப்புரிமையாக ஒரு மொழி இயற்றுவான் புகுந்து, தமிழ் குடகந் தெலுங்கம் முதலியவற்றினும் ஆரியம் பாலியினும் சொற்பொருணயங்கள் பகுத்தெடுத்துப் பின் றாமுஞ் சிலகூட்டி இங்ஙனந் திருத்தியதென்னும் பெயர்க்காரணம் பொள்ளெனப் புலப்படுதல் வேண்டிச் சமக்கிருதம் எனப் பெயரும் அமைத்து ஒரு மொழிகட்டிவிட்டார். இவ் வுண்மை ஆருகதர் தஞ் சமயச் சார்பான நூல்கள் பலவும் மொழிச் சார்பான நிகண்டு முதலாயினவும் சமக்கிருதத்திற் பெருகச் செய்தமையானே நன்றுணரப்படும். இன்னும் அவ்வாருகதர் தமிழ்மொழியைப் போலவே வடமொழியும் மடவிய வெள்ளைக்கிழத்திக்கொரு கண்ணென்று பலரும் பாராட்டுதற் பொருட்டுப் “பண்ணும் பஞ்சாதியும் பாட்டும் நிறுத்தமு மாகப் பலப் பல நூலியற்றினார். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/250&oldid=1585862" இலிருந்து மீள்விக்கப்பட்டது