உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

  • மறைமலையம் 19

இனி 114ஆவது வரிமுதல் வடமொழியிலுள்ள நூற் றொகை மிகுதி காட்டி, அவ்வாற்றால் அது தமிழோடு ஒப்புமை பெறல் சாலாதென்று வலியுறுக்கின்றார். என்னை? வடமொழி யிலுள்ள அந்நூல்களுள் ஒரோவொன்று தவிர, ஏனைப் பெரும்பாலனவெல்லாம் முன் சொன்ன பொருளையே பின்னும் விரித்தலும், அறிவினுட்பத்திற்குப் பொருந்தாத போலிப் பொய்க்கதைகளை வரம்பின்றிப் பெருக்கு தலும்,உலகவொழுக்கத்திற் புல்லியவாய்க் கருதப்படும் புன்செயல்களையெல்லாம் செய விதித்தலும், இரக்கம் சிறிதுமின்றிக் கணக்கற்ற உயிர்களைக் கொலை செய்து வேள்விகள் வேட்கவென வேட்கவென வகுத்தலும், கள்ளுண்டல், மகளிரை மிகவிழைந்து கெடுத்தல், சூதாடல், புலாலுண்ணல், மிக்க இணைவிழைச்சு முதலிய பொருந்தா வொழுக லாற்றினைத் தேவர்கட்கேற்றிக் கூறுதலும், ல் பாருள் இல்குணங்களைமிகப் பெருக்கியுரைத்தலும் செய்து போ தருகின்றனவாகலின், க் குற்றங்கள் சிறிதுமில்லாத் தமிழ்நூல்களோடு அவை சமம் பெறல் எவ்வாற்றானும் இல்லையாம்.

L

இனி 129ஆவது வரி முதற் செந்தமிழ்த் தனி முதன்மை அதன் பழமை கூறுமுகத்தாற் காட்டுகின்றார். பாலிமொழி யுங் கீர்வாணமுந் தோற்றமுறுதற்கு மிகப் பழையகாலத்தே குமரிநாடு கடல்கொள்ளப்படுமுன் அந்நாட்டின்கண் ஓடிய பேரியாற்றருகின் மணிமலைச் சாரலிற் செங்கோன் என்னும் மன்னர்மன்னன் அவைக் களத்திலே தமிழ் மிகப் பயிலப் பட்ட திறம் எடுத்து விளக்கப்படுகின்றது. இப்போது இந்து மாகடல் எனப் பெயர் பெறுகின்ற மாகடல் பல்லாயிர ஆண்டுகளின்முன் குமரி நாடாயிருந்ததென்பது “வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன் மலை யடுக்கத்துக், குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள ா" என்று கூறுமாற்றானும் வேனிற் காதையில் “தொடியோள் பௌவம்” என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரைக்குமுரையானும் இனிது விளங்கும். ஜர்மானிய பண்டிதர் ஹெகிள் என்பவரும் குமரிநாடு முன்னிருந்த வுண்மையினை இனிது நிறுவினார். இவ்வரலாறெல்லாம் யாமீண்டு விரிப்பிற் பெருகும். 'ஞானபோதினி' இதழில் யாமெழுதிய வரலாற்று உரையிற் காண்க. இனி,

இளங்கோவடிகள்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/251&oldid=1585863" இலிருந்து மீள்விக்கப்பட்டது