உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்

66

ரைமணிக்கோவை

"ஆழி யளவுசெய்து வாணையான்-பாழிப்

பெருந்தோள் வழுதி”

219

அப்

என்றது வடிம்பலம்ப நின்ற பாண்டியனைக் குறிப்பிட்டது. வன் வரலாறு புறநானூற் றுரையினும் மதுரைக் காஞ்சி யினுங் காண்க. அப்பாண்டியன் அமர்ந்த தென் மதுரைதான் ல் கொள்ளப்பட்ட மதுரை யென்பது. இப்போதுள்ள மதுரை நகரன்று, அத் தென்மதுரையிலேதான் பாண்டியன் அவைக்களத்து முதற்சங்கம் நிலைபெறலா யிற்று. அச்சங்கத்து வீற்றிருந்தார் அகத்தியனார், முரஞ்சியூர் முடிநாகராயர் முதற்பலர். இதன் ஆக்கியோர் அவலோகித முனிவனும் அச்சங்கத்து வீற்றிருந்தான் எனக் கூறியது பௌத்த து நூல் வழக்குப் பற்றி. பின்னர்த் தென்மதுரை கடல் கொள்ளப் படுதலின், வடமதுரையின்கண் இடை டைச்சங்கமுங் கடைச் சங்கமும் நிலைபெற்றன வென்கின்றார்.

இனி 151ஆவது வரியிலிருந்து ஆராய்ச்சிவன்மையிலார் ஒரு சாரார் அறிவு மயங்கி வடமொழியிலிருந்து தமிழ் பிறந்ததெனக் கூறும் கையறியாப் போலிப் பொய்யுரையை மறுத்திடுகின்றார். தமிழ் திராவிடம் பாலி முதலியவற்றி னின்றும் பிறந்து, தனக்கென ஓரெழுத்தின்றி வடநாட்டிற் பிராகிருத மொழி எழுத்தினையும், தென்னாட்டிற் றமிழ்க் கிரந்த வெழுத்தினையும் துணை கொண்டு நடைபெறும் சமக்கிருதம் தன்னை யீன்றாளைத் தன்மகளெனக் கூறி இழிவுரைப்பது பொருந்தாதென ஒருதாரணமுகத்தான் விளக்குகின்றார்.

இனி 169ஆவது வரி முதல் செந்தமிழுக்கு இயற்கையிலே யுள்ள தெய்வச் சிறப்பினை எடுத்துரைத்துக் கொண்டுபோய், "ஓவிலா

ஓராழிச் செங்கோ லுயர்வொப்பி லாவரசே

பேராழி போலும் பெரும்புகழாய்-ஓராமல்

உன்செயல்க ளெல்லாம் உரைக்கத் தலைப்பட்டால் என்சிறுமைக் குள்ளே யியையுமோ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/252&oldid=1585864" இலிருந்து மீள்விக்கப்பட்டது