உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

220

மறைமலையம் 19

எனத் தமிழ்மொழிப் பண்டைச் சிறப்பினையும், பிற மொழிக்கு அஃதாக்கம் பயந்தமையினையும் ஒருவாறு நன்கு தொகுத்து அறிவுறுத்தினார்.

இனிஇப்பகுப்பின்கீழ் வருவனவெல்லாம் தமிழ்மொழியி லுள்ள நூற் பொருள்களை எடுத்துக்காட்டி அவற்றின் விரிவும் பயனும் இனிது விளக்கி மேம்படுத்தலின் அப்பகுதி கற்கும் மாணாக்கர் தாமே யறியற் பாலனவாதல்பற்றி விடுக்கின்றாம். அது நிற்க.

இதன் ஆக்கியோர் தமக்கு நட்பின் கெழுதகைமை யிழுக்கா. நண்பர் பலரையும் இத்தூதின் இறுதிப் பாகத்திற் றொகுத்துக் கூறியுள்ளார். அவருள் எமக்காசிரியராள திருமிகு வெ. நாராயணசுவாமி பிள்ளையவர்களின் குன மாட்சி வியந்து கூறிய பகுதி இன்றியமையாப் பொருட் பொலிவுடையதாகலின் அதனை யீண்டெடுத்துக் காட்டி முகவுரையை முற்றுப் பெறுவிக்கின்றாம்.

“--முந்துவளச்

சிந்தாமணி யென்னும் யான்பிறந்தசீர்பதியிற்

சிந்தா மணிபோலுஞ் சீர்ச்செல்வன்-நந்தாத அங்கிலே யத்தலைவ ராடற் பெருஞ்சேனைத்

துங்கத் தலைமைத் துரைத்தனத்தான்-மங்காத் திருவேங்க டாசலமால் செய்ததவம் மைந்தன்

உருவோடு வந்ததென உற்றோன்-மருவுநட்பின் என்னிளமை தொட்டின்றும் என்னுளத்து நீங்காது

மன்னுழுவ லன்பன் வளர்செல்வன்-சொன்ன கலைவகைக ளென்னோடு கற்றபுலவன்

நிலைநற் குணமலைமேல் நிற்போன்-புலமைமிக்க பொய்யா மொழியான் பொருவேன் நினக்கென்னப்

பொய்யா மொழியான் பொறைமிக்கான்-நையாமல் நாகையார் பல்லோரை நற்புலவ ராக்குவித்த

நாகையாச் சொல்வளவன் நாகரிகன்-ஓகையாற்

பாரா யணவரிய பல்புகழான் நல்லவர்சொல் நாராயணசாமி நாவலவன்’

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/253&oldid=1585865" இலிருந்து மீள்விக்கப்பட்டது