உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

8. சைவசமயத்தின்

நெருக்கடியான நிலை

சைவசமயமானது ருவேறுவகைப்பட்ட மக்கட் கூட்டத்தின் நடுவே அகப்பட்டுக் கொண்டு, ஒரு கூட்டத் தினர் ஒருபுறத்தும் மற்றொரு கூட்டத்தினர் மற்றொரு புறத்துமாக நெருக்க, அந்நெருக்கடியில் நின்றும் பிழைத் தோட வழிகாணாது நசுங்கி உயிர்துறக்கும் நிலையில் நின்று தத்தளிக்கின்றது. அவ்விருவேறு கூட்டத்தினரில் ஒருபகுதி யார் தம்மைச் சைவர் எனவுந் தாமே சைவசமயத்தின் உண்மையை முற்றும் உணர்ந்து அதனைப் பாதுகாப்பவ ரெனவுங் கூறிக்கொள்ளுவோர் ஆவர்; மற்றவரோ, சைவக்குழுவினர்

கூறுவனவே

ச்

சைவசமயக்கோட்பாடு

களாகுமெனப் பிறழ உணர்ந்து, அக்கோட்பாடுகள் தமிழர் முன்னேற்றத்திற்கு டந் தராமல் அதற்குக் கேடுபயப் பனவாயிருத்தலால், அவை தம்மை வேரோடு களையக் கடவேமென மடிகட்டி நிற்பவர் ஆவர். இவ்விருவேறு வகுப்பினருஞ் சைவ சமயத்தின் உண்மைகளை ஆராய்ந்து அறிந்தவர் அல்லர்; அவ்வவருந்த தத்தமக்கு வேண்டுவன சிலவற்றைச் சைவநூல்களிலிருந்து பொறுக்கியெடுத்துக் கொண்டு, அவைதாமே சைவம் என்பாரும், அவைதாமே தமிழர் முன்னேற்றத்திற்குத் தடையாவன என்பாருமாய்த் தம்முள் இகலிச் சைவ உண்மைகள் சிறிதும் அறியாப்

பொதுமக்களைத் திகைப்புறச் செய்கின்றனர்.

சைவத்தின் உண்மைகளோ ஒரு பேழையிற் பொதிந் துவைத்த மணிக்கோவைகள் போல் என்றும் மங்காது மிளிரும் மாட்சியுடையன; மற்று, அம்மணிப் பேழைமேற் சேர்ந்து அதனை மூடியிருக்குங் குப்பைக் குவியல்களோ மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/254&oldid=1585866" இலிருந்து மீள்விக்கப்பட்டது