உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் 19

(6

அடியிற்புதைந்த

அருவருக்கத்தக்க தாழ்ச்சியுடையன. அம்மணிக் கோவைகளை விட்டு, அவற்றின்மேற் குவிந்த குப்பைகளையே பெரிது பாராட்டிப் பாதுகாப்பார்போற், சைவவுண்மைகளைக் கைவிட்டு, அவற்றை மறைத்து அவற்றின் மேற் குவிந்து கிடக்குஞ் சைவமல்லாக்கோட்பாடுகளையே சைவமென விடாப்பிடியாய்க் கைக்கொண்டு நிற்கும் போலிச்சைவர்களே, சைவசமயத்தை ஆராய்ந்து பாராத பிறர் அதனை இகழ்ந்து ஒழிப்பதற்கு இ ஞ் செய்து வருகின்றனர். ஆகவே, சைவ சமயத்திற்குத் தீங்கு இழைப்போரிற் சைவப் பயர் புனைந்து நிற்கும் போலிச்சைவர்களே முதற் பகைவராவர். மற்றை வகுப்பினரோ சைவசமய உண்மைகளை ஆராயமாட்டாராய்ப் போலிச்சைவர் கோட்பாடுகளையே சைவமென நம்பி இகழ்பவராதலால் அவரது பகைமை அத்துணை மிகுதியாக அஞ்சற்பால தன்று; ஏனென்றால், இவர்கள் சீர்திருத்த நெறியிற் செல்பவர்களாயிருத்தலால், உண்மைச்சைவக்கோட்பாடுகளை உணருங்காலத்து இவர்கள் அவற்றிற்கு மாறாய் நின்ற நிலையைவிட்டு ஒருமையுறுதலுங் கூடும்.மற்றுப், போலிச்சைவர்களோ சைவமல்லாதவற்றையே சைவமாக இறுகப்பற்றி எவ்வகைச் சீர்திருத்தத்திற்கும் உடம்பட்டு வாராதவராகலின், அவர் உண்மைச் சைவத் தோடு ஒட்டி வருவரென்பது கனவினுங் கருதற்பாலதன்று. ங்ஙனஞ் சைவசமயக் கோட்பாடுகள் அல்லாதவற்றையே சைவசமயமெனக் கொண்டு ஒழுகும் போலிச்சைவர்களின் ஆரவாரம் மிகுந்திருக்குங்காறும், உண்மைச் சைவந் தலை யெடாது; அதனாற், புறச்சமயத்தார் சைவசமயக்கோட் பாடுகள் இவையேயெனப் பிழைபட நினைந்து அவற்றை யும் அவற்றோடு உடன்வைத்து உண்மைச்சைவத்தையும் இகழ்ந்துரைக்கும் இகழ்ச்சியுரைகளுங் கிளையாதிரா. ஆகவே, உண்மைச் சைவக்கோட்பாடு இவையென்பதும், அவையல்லாத போலிச்சைவ கோட்பாடுகள் இவை யென் பதும் இங்கே சிறிது பகுத்துக்காட்டுவாம்.

சைவசமயம் என்பது தென்றமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கே உரித்தான கடவுட்கொள்கை யாகும். காணவுங் கருதவும்படாத அருவநிலையிலுள்ள முழு முதற்கடவுள், உயர்ந்த அன்பும் அறிவும் உடைய பெரியார் சிலர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/255&oldid=1585867" இலிருந்து மீள்விக்கப்பட்டது