உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை

  • உரைமணிக்கோவை :

223

அருள்புரிதல் வேண்டி அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியனாய்ச் சிவந்தஒளி வடிவிற்றோன்றி அவரை ஆண்டு கொண்ட வகைமையிலிருந்து, அத்துணை யணுக்கமாய் வந்த அச்சிவந்த திருவுருவத்தையே தமிழ்ச் சான்றோர் அதற்குச் சிறந்த இலக்கணமாய் வைத்துச் 'சிவன்' என்னும் பெயரால் வணங்கி வருகின்றனர். தீயும் நீரும் ஒருங்கு இயைந்தாலன்றி இவ்வுலகமும் இவ்வுலகத்து நிகழ்ச்சிகளும் நிலைபெறாவாகலான், தீயின் செந்நிறத்தை ஒப்பதான ஓர் ஆ ண்வடிவும் நீரின் நீல நிறத்தை ஒப்பதான ஒரு பெண் வடிவும் ஒருங்கு இயைந்த ஓர் அருமைத் திருவுருவமே கடவுளு க்கு உண்மைவடிவாதல் வேண்டுமென்பது பண்டைக்காலந்தொட்டு வந்த தமிழ்ச் சான்றோர் கொள்கை யாகும். சேயொளிவடிவிற் 'சேயோன்','சிவன்' எனவுங், கருநீலவடிவில் ‘மாயோள்’, ‘மாயோன்' எனவும் முழுமுதற் கடவுள் வழங்கப்பட்டு வரலாயிற்று. பிறப்பு இறப்புக்களுக்கு வித்தான இரு வினையும், அவ்இருவினைக்கு வித்தான அறியாமையும் இறைவன் உடையன் அல்லாமையால், அவன் என்றும் விளங்கிய அறிவினனாயே இருப்பனெனக் கடவு ளுண்மையியல்பையுந் தமிழ்ச்சான்றோர் நன்கறிந்திருந்தனர்.

ரு

D

இங்ஙனம் அவர்கள் கடவுள் நிலையை நன்குணர்ந்தாற் போலவே, கடவுள் அல்லாத சிற்றுயிர்களின் இயல்பையுந் தெளிய அறிந்து நின்றனர்; சிற்றுயிர்கள் அறிவுடைய வாயினும், அவற்றின் அறிவு மாசு பொதிந்திருத்தலால் உடம்புகளின் துணையாலன்றி அது விளங்கப் பெறாமை யும், அவ்வாறு அது விளங்கப்பெறுமிடத்தும் புல் மரம் முதலிய உடல்களில் ஓரறிவும், நத்தை கிளிஞ்சில் முதலிய உடம்புகளில் ஈரறிவும், சிதல் எறும்பு முதலிய உடம்புகளில் மூவறிவும், நண்டு தும்பி முதலிய உடம்புகளில் நாலறிவும், விலங்கு பறவை முதலிய உடம்புகளில் ஐயறிவும், மக்கள் உடம்புகளில் ஆறறிவும் படிப்படியே சிறிது சிறிதாக விளங்கப்பெறுதலும், ஒரு பிறவியிற் கொல்லாமை ம உனுண்ணாமை பொய்யாமை முதலான நல்வினைசெய்து தன்னறிவையும் அன்பையும் வளரச் செய்த ஓருயிர் மறுபிறவியில் அதனினுஞ் சிறந்த ஒரு பிறவியைப் பெற்று அறிவும் ஆற்றலும் மிக்கு விளங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/256&oldid=1585868" இலிருந்து மீள்விக்கப்பட்டது