உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் 19

பெறுதலும், அவ்வாறு எடுத்தபிறவியில் நல்வினையைச் செய்யாத உயிர் அடுத்த பிறவியிற் பின்னும் இழிந்த உடம்பைப் பெறுதலும், பிறவிகடோறும் அறிவையும் அன்பையும் வளரச் செய்த உயிர் இறுதியிற் கடவுளின் அருளை முற்றப்பெற்றுப் பிறவியும் மாசுந் தீர்ந்து கடவுளின் அருளொளியிற் கலந்து பேரின்பத்திலிருத்தலும் ஆகிய அச்சிற்றுயிர் நிகழ்ச்சிகளை யெல்லாம் ஐயந் திரிபற ஆராய்ந்து கண்டனர்.

இனி, ஆறறிவுடைய மக்கட்பிறவியெடுத்த உயிர்கள் தாம்பெற்ற இவ்அரிய பிறவியிலேயே விரைந்து தூயராய் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுதற்கு இன்றியமை யாது செயற்பாலன; தம் மனமொழி மெய்கள் ஒன்றி னொன்று முரணாமல் தமக்கும் பிறர்க்கும் பிறவுயிர்க்கும் நலம் பயப்பனவற்றையே ஒருமுகமாய் நாடி நிற்குமாறு பழகுதலும், துன்பத்திற்கு இடனின்றி இன்பத்தையே ஓவாது தருங் கல்வி கேள்விகளிலுந் தவமுயற்சியிலுந் தமது அறிவை நிலைப் பித்தலும், இறைவன்றன் பேரருட்டிறத்தை நினைந்து நினைந் துருகுதலும் ஆமென்பதூஉந் தமிழ்ப்பேரறிஞர் கண்டறிந்த தாகும்.

இக்கோட்பாடுகள் முற்றும், இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூற்றாண்டுகட்கு முன்னெழுந்த பண்டைத் தமிழ்ப் பெரும் பனுவலாகிய தொல்காப்பியத்திலிருந்து, அதன்வழி வந்த திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், சிவஞான போதம் முதலான தனிச் செந்தமிழ்நூல்களிலெல்லாம் முன்னொடு பின் சிறிதும் மாறின்றிக் காணப்படும். இவ்வுண்மை முடிபுகள் இந்நூல்களின் மட்டுமேயன்றி, இச்செந்தமிழ் நொெடு ங்கணும் அமைக்கப்பட்ட திருக்கோயில் அமைப்பு களிலும் இனிதுவிளங்குமாறு இயைக்கப்பட்டிருத்தலை ஆழ்ந்த கருத்துடையாரெவரும் எளிதில் உணர்வர். வுண்மைகளை எளிதில் உணர்தற்கும், நினைவை ஒருமுகமாய் நிறுத்தி இறைவன் திருவுருவினை எளிதில் நினைந்து உருகு தற்குந் திருக்கோயில் வழிபாடு பெரிதும் உதவிசெய்தலின், கட வுளை நேரே கண்டவர்களும் அதனைக் கைந்நெகிழவிடாது கடவுள் வணக்கத்திற்கு அதனை இன்றியமையாக் கருவியாய்க்

கடைப்பிடித்துக்

கொண்டு ஒழுகலாயினர்.

வ்

எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/257&oldid=1585869" இலிருந்து மீள்விக்கப்பட்டது