உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

225

திருக்கோயிலிற் சென்று இறைவன்றிருவுருவிற்கு அடையாள மாக நிறுத்திய அருட்குறியினை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் சைவசமயக்கோட்பாடுகளுள் ஒன்றாதல் பெறப்படும்.

வ்வளவே சைவசமயக் கோட்பாடுகளாகும். இவற்றைக் 'கைக்கொண்டொழுகுவோர் எவராயினும் அவரெல்லாஞ் சைவசமயத்தவரெனவே படுவர். படுவர். இக் காள்கைகள் அத்தனையும் ஆழ்ந்து ஆராய்ந்த அறிவின் நுட்பத்தாற் கண்டு அமைக்கப்பட்டனவாதலால், க் கொள்கைகட்கு மாறாவன எவையும் சைவசமயத்திற்கு உடம்பாடாகமாட்டா. அங்ஙனமிருந்தும், இப்போதுள்ள சைவரிற் பெரும்பாலார் தமிழிலுள்ள சைவநூல்களை அவற்றின் கருத்தையொட்டி முன்பின் முரணற ஆராய்ந்து பார்க்கும் அறிவாற்றலின்றி, ஆரியர் கூறும் புரட்டுரைகளிற் சிக்குண்டு, சைவக்கொள்கைகட்கு முழுமாறானவைகளையும் அம்மாறுபாடுகள் நிறைந்த ஆரிய நூல்களையுந் தமது சைவசமயத்துக்குரிய நூல்களாகக் கைக்கொண்டு, அவ்வாரிய நூற்சார்பாற் சைவத்திற்குத் தாமாகவும், தாம் தழுவியவற்றை நம்பிக் குறைகூறும் பிறர்வாயிலாகவும் பெருந்தீது புரிந்து வருகின்றனர். இவ்வாறு போலிச்சைவர்கள் கைக்கொண்ட ஆரிய ரியநூற் கொள்கைகள் சைவத்துக்கு மாறாய்த் தீங்கு பயத்தலை ஈண்டு ஒரு சிறிது காட்டுதும்.

ஆரியர் முழுமுதற் கடவுளுணர்ச்சியும் அருளொழுக் கமும் உடையரல்லர். அவர்கள் பண்டைக் காலத்தில் இவ்விந்திய நாட்டுக்கு வடக்கேயுள்ள பனிநாடுகளில் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுங் கிடை யாமல் விலங்கினங்களைக் கொன்று தின்றுஞ் சோமப்பூண்டில் வடித்த கள்ளை யுண்டும் அலைந்து திரிந்தவர்கள், தமக்கு வேண்டும் இரைதேடிச் சென்ற இடங்களில் உள்ள மக்களோடு ஓயாமற் போராடி அவர்தம் உணவுப்பண்டங்களையும் பிறவற்றையுங் காள்ளையடித்தவர்கள். தம் பகைவரிற் சிறையாகப் பிடித்துக் காணர்ந்த எளிய மக்களையுங் கொலைசெய்து அவர்களின் இறைச்சியைத் தீயில் வதக்கித் தின்றவர்கள், போரில் இறந்து பட்ட தம்மவர் சிலரின் ஆவிகளை இந்திரன், வருணன், அதிதி, பூஷன், இயமன், உஷாக்கள், அசுவினிகள், ரிபுக்கள், பிதிர்க்கள் என்னும் பெயரால் தமக்கு வெற்றியுண்டாகும்பொருட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/258&oldid=1585870" இலிருந்து மீள்விக்கப்பட்டது