உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் 19

வணங்கி வேண்டி வந்ததுடன், அவற்றிற்கு ஆடு மாடு எருமை குதிரை முதலான விலங்குகளையும் போரிலகப் பட்ட மக்களையும் ஆயிரக்கணக்காய்க் கொலைசெய்து வெறியாட்டு வேள்விகள் எடுத்து மிகக் கொடியராயும் ஒழுகினவர்கள், இவர்கள் தாமெடுத்த வெறியாட்டு வேள்விகளில், மேற்குறித்த பேய் வடிவங்களின் மேற்றமது ஆரிய மொழியிற் பாடிய பூசாரிப் பாட்டுகளே இக்காலத்தில் இருக்கு வேதம் எசுர்வேதம் சாமவேதம் அதர்வவேதம் என

வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாரியர்கள் இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லை வழியாய் இதனுட் புகுந்த காலத்தில் இதன் வட நாடுகளில் மிக்க சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களை முதலில் எதிர்த்துப் பார்த்துப், பிறகு அது தமக்கு வெற்றி தராமையின், அவர்களொடு நட்புக்கொண்டு, அவ்வழியே தமிழ் மக்களைத் தம் வலையுள் அகப்படுத்துவாராயினர். அந் நாளில் தாம் கொணர்ந்த ஆரியச் சிறு தெய்வப் பாட்டு களைத், தமிழரிற் சிறந்த சான்றோர் உதவி கொண்டு நான்கு தொகுப்பாக்கி, அவை தமக்கு 'வேதம்' என்னும் பெயரையுஞ் சூட்டிவிட்டனர். இங்ஙனந் தமிழ்ச் சான்றோர்கள் ஆரியச் சிறு தெய்வப் பாட்டுகளைத் தொகுத்து நால்வகையாகப் பகுத்த காலத்தில், தமிழ்த் தெய்வமாகிய 'உருத்திர சிவன்' மேல் தாம் இயற்றிய சில செய்யுட்களையும் ஆங்காங்கு உடன் சேர்த்து, அந்நூல்கட்குச் சிறப்புத் தந்தனர். தந்துமென்! ஆரியர்கள் சிறு தெய்வ வணக்கத்தினுங் குடி கொலை சூது முதலிய தீவினைகளினும் மிகப் பழகிவிட்டமையின், தமிழ்ச் சான்றோர் காட்டிய முழுமுதற் கடவுளான சிவபிரான் வணக்கத்தைச் சிறிதும் ஏற்றாரல்லர். இதற்கு, இக்கால ஆரியப் பார்ப்பனர் தம் ஒழுகலாறே சான்றாம்; இவர்கள் எத்தகைய சிறு தெய்வத்தையும் வணங்குவர்; எத்தகைய மதத்தையும் பின்பற்றுவர்; ஆனாற், சிவபிரானை மட்டும் வணங்கார்; சைவவொழுக்கத்தையும் பின்பற்றார்.

த்தன்மையரான ஆரிய மக்களின் சிறு தெய்வப் பாட்டுகளும், அவர் தம் வெறியாட்டு வேள்விகளின் ஆரவாரவுரைகளுமே பெரும்பாலும் நிரம்பிய இருக்கு எசுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/259&oldid=1585871" இலிருந்து மீள்விக்கப்பட்டது