உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

227

சாமம் அதர்வம் பெருமான் அருளிச் செய்த வேதங்களாகக் கொண்டு, போலியுரையை அழுத்தமாய் கூறுதலிற் போலிச் சைவர் கள் முனைந்து நிற்கின்றார்கள். இவர் தம் இப்போலியுரையை யெடுத்துக் கொண்ட பிறர், 'கொலை குடி மலிந்த இக் கொடிய ஆரிய நூல்கள் தாம் நும்சைவ வேதங்களோ! இவற்றைச் சொன்ன சிவன்றான் நீர் வணங்கும் முழுமுதற் கடவுளோ! அழகிது! அழகிது' என்று ஏளனஞ் செய்கின்றனர். போலிச் சைவர்களால் இங்ஙனம் சைவ சமயத்திற்கு வரும் ஏதங்கண்டு, 'சைவ சமயாசிரியர்கள் தழுவிக் கூறிய ஆரிய வேதங்களென்பன இருக்கு எசுர் முதலிய இந்நான்கும் அல்ல! தமிழ் வேந்தர்களும் முனிவர்களும் அருள்வழி நின்று ஆரிய மொழியில் அருளிச் செய்த உபநிடதங்கள் சிலவே அவையாம்” என்று யாம் ஆழ்ந்தாராய்ந்து, எம்முடைய பண்டைக்காலத் தமிழர் ஆரியர், வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூல்களில் விரித்து எழுதியும், அவை தம்மை ஒரு சிறிதும் உணர்ந்துபாராத போலிச் சைவர்கள், 'இவர் சைவ வரம்பை அழிக்கின்றார்!' என்று எம்மேற் சீறிப் பாய்கின் றார்கள். எம்மேற் சீறும் இப்போலிகள், புறச்சமயத்தாரும் புது இயக்கக்காரரும் இவர் தம் பாழ்த்த உரைகொண்டே சைவ சமயத்தை இழித்துப் பேௗசுதற்கெல்லாம் வகை சொல்ல மாட்டாமல் வாயடங்கி நிற்றலென்னை?

முதலியஆரிய நூல்களைச் சிவ

மாணிக்கவாசகர் திருஞான சம்பந்தர் அப்பர் சுந்தரர் முதலான தெய்வ அருளாசிரியர் அருளிச்செய்த தேவார திருவாசகங்களில் 'வேதம்’, 'மறை’ என்னுஞ் சொற்களாற் குறிக்கப்படுவனவெல்லாம் இருக்கு, எசுர், சாமம், அதர்வம் என்னும் ஆரிய நூல்களேயாகும் என அலறித்திரியும் போலிச்சைவப் புலவர்கள், 'குடியும் உயிர்க்கொலையுஞ் சூதுங் காமவெறியுஞ் சிறு தெய்வ வணக்கமும் மலிந்த இவ்வாரிய நூல்களை ஒப்புக் கொண்ட நும் சமயாசிரியர் அக்குடி கொலை முதலான கொடுந்தீய ஒழுக்கங்களை ஒப்புக் கொண்டா ரல்லரோ?' எனப் புது இயக்கக்காரர் கேட்குங் கேள்விக்கு விடை சொல்லமாட்டாமற் கலங்கி வீணே அவரை வைது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/260&oldid=1585872" இலிருந்து மீள்விக்கப்பட்டது