உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மாட்டாத

சைவப்

  • மறைமலையம் 19

ஒளித்தல் என்னை? தேவார திருவாசக ஒரு தெய்வச் செந்தமிழ் மறைப்பொருள்கட்கும் அவ்வாரியச் சிறு தெய்வ நூற் பொருள்கட்கும் ஒற்றுமையுளவேற் காட்டுக என்று சைவ மெய்ச்சான்றோர்கள் கடாவுங் கடாக்கட்கு விடையிறுக்க போலிகள், பிடிதிருநீறும்படிஉருத் திராக்கமும் அணிந்துகொண்டு, சிறு தெய்வ வெறியாட்டுப் பாட்டுகள் நிறைந்த இருக்கு எசுர் முதலான ஆரிய நூல்களையே சமய குரவர்கள் ‘மறைகள்' 'வேதங்கள்’ என்றாரெனத் தேவார திருவாசகங்களில் அச்சொற்கள் வந்த தொடர்களைப் பக்கம் பக்கமாக அட்டவணையிட்டுக் காட்டிச், சிவபெருமானை அச்சிறு தெய்வங்களினுஞ் சிறியராக்கிக் கொடுந்தீவினைக்கு ஆளாகுதல் என்னை? பிறப்பு இறப்பு இல்லாத் தனி முதற்கடவுளான சிவத்தை யன்றி வேறெதனையுங் கனவிலும் நினையாத சைவ, சமயாசிரியர்கள், பிறப்பு இறப்புக்களிற் கிடந்துழன்று இழிந்த மக்களுஞ் செய்யாத கொடுந்தீவினைகளைச் செய்த இந்திரன் முதலான தேவர்களையும் அவர்கள் மேற்பாடப்பட்ட பாட்டுக்களையும், ‘வேதம்’, ‘மறை' எனக் கொண்டாடுவரோவென்று யாங் கடாவினால், அதற்கு விடை சொல்லமாட்டாது "பட்டுக் கோட்டைக்கு வழியாது? என்று வினாயினாற்குக் கொட்டைப் பாக்குத் துட்டுக்கு எட்டு” என்று விடையிறுத்தாரோ டொப்பச், சமய குரவர்கள் ‘இருக்கு எசுர் முதலியவற்றையே சிவபிரான் திருமொழி என்று அருளிச் செய்தார்கள்' எனக் கரையா நிற்கின்றனர். இருக்கு முதலிய ஆரிய நூல்களிற் சிவபிரான்மேற் பாடப்பட்ட பதிகங்கள் எத்தனை? ஏனைச் சிறு தெய்வங்கள்மேற் பாடப்பட்டன எத்தனை? என்று யாம் கடாவினால், அதற்கு விடை சொல்ல அறியாது, சிறு தெய்வங்கள்மேற் பாடப்பட்டனவுஞ் சிவபிரான்மேற் பாடப் பட்டனவேயாம் என்று அங்ஙனமே அவர் பொருந்தாவிடை கூறுகின்றனர்.

சிறு தெய்வப் பெயர்களெல்லாஞ் சிவபிரான் பெயர் களேயாதல் உண்மையென்றாற்,கேநோபநிடதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இயக்க வடிவிற்றோன்றிய சிவபிரானை அறிந்திலரென நுவலப்பட்டதும்,“மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்

எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/261&oldid=1585873" இலிருந்து மீள்விக்கப்பட்டது