உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் 19

பண்டைக் காலத்தில் மிகச் சிலவேயாகும். பிறகு எல்லாம் வல்ல கடவுளை வணங்குதற்குத் தக்க பேரறிவும் பேரன்பும் வாயாதவர்கள் தம்மோடொத்த மக்களைக் கடவுளாகப் பிழைபடக் கருதி, அவர் தம்மைத் தாம் வணங்குதல்போல மற்றைப் பொதுமக்களும் வணங்குமாறு செய்தற் பொருட்டு, முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியுந் தாம் வணங்கத்துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியுங் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங் கடோறும் புதிய புதியவாய் உண்டாக்கி, அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்கவிட்டனர். ஆகவே, கடவுளின் உண்மை லக்கணங்களைக் கதைகளின் வாயிலாக விளக்கும் பழைய உண்ை ய உண்மைப் புராணங்கள் சிலவாயிருப்பக், கடவுள் நிலைக்கு மாறான கதைகள் மலிந்த புராணங்கள் வரவர மிகப் பெருகலாயின.

ல்லையென மறுத்துத்

இறைவன் முப்புரங்களை அழித்த கதையுங், காமனை எரித்து அம்மையை மணந்து உலகிய லொழுக்கத்தை நிலைபெறுத்தின கதையுங், காலனைக் காய்ந்த கதையும், நான்முகன் திருமால் கொண்ட செருக்கை அடக்கின கதையும், அவர் நடுவே அடிமுடியில்லாத் தழற்பிழம்பாய் நீண்டகதையும், எல்லா உலகமும் மடிந்த சுடுகாட்டின் கண் ஆடின கதையும், இறைவன் தாருகவன முனிவர் வேட்ட வேள்வியினை அழித்த கதையும், இன்னும் இவைபோல்வன சிலவும் எல்லாம் வல்ல முழு முதற்கடவுளின் உண்மையையும் அருளிரக்கத்தையும் ஏழை மக்கட்கு இனிது விளக்கிக் காட்டுஞ் சிறந்த பழங்கதை களாகும். மற்றுக், கந்தன் கதை, விநாயகன் கதை, காளிகதை, கண்ணன் கதை, ராமன் கதை போல்வன வெல்லாம், முழுமுதற் பழங் கடவுளாகுய சிவத்தை இழித்துத், தாந்தாம் பாராட்டிய மக்களை உயர்த்தல் வேண்டிப் பின்வந்தோர் காலங்கடோறுங் கட்டிவிட்ட புதுப்புதுக் கதைகளேயாகும். இவ்விரு வேறு கதைத் தொகுதிகளில் முற்சொன்னவை களே இறைவன்றன் அருள் ஆற்றல்களை விளக்குஞ் சிறப்பும் பயனும் உடை உடையன; யன; பிற் பிற்சொன்னவைகளோ முழுமுதற் கடவுளாம் அம்மையப்பரை மக்கள் வணங்க வொட்டா மற்றடைசெய்தலுடன், மக்கள் தம்போன்ற மக்களையே

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/263&oldid=1585875" இலிருந்து மீள்விக்கப்பட்டது