உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

231

வணங்கி, ஒரு குருடனும் அவனுக்கு வழிகாட்டச் சென்ற மற்றொரு குருடனும் ஒருங்கு சேர்ந்து ஒருபெரும் படுகுழியில் வீழ்ந்தாற்போல, அவ்வாறு மக்களை வணங்கும் மக்களெல்லாருந் தீவினைப்படும் பள்ளத்தில் வீழ்ந்தாழுமாறு செய்வனவாகும்.

ஆகவே, புராணங்கள் என்ற பெயரால் வழங்குங் கதைகளுள் எவை கடவுள் நிலையொடு மாறாகாதன? எவை அதனொடு மாறாவன? என்று பகுத்தாராய்ந்து பார்த்துக், கடவுள் இலக்கணத்தை விளக்குஞ் சிறப்பு வாய்ந்த கதைகளை மட்டுந்தழுவி, ஏனையவைகளைத் தழுவாதொழிதலே, நன்மை தீமைகளைப் பகுத்தறிவும் உணர்ச்சி வாய்ந்த மக்கட்பிறவி யெடுத்தார் செய்தற்குரிய அரிய செயலாகும். ஆனால், தம்மையே சைவநுாலுணர்ச்சி உடையராகக்கருதி இறுமாந்தொழுகுஞ் சைவப்போலிகளோ, சிவபிரான் றைமைத் தன்மைக்கு இழுக்கான புராணகதைகளையும் ஏனைச் சிறந்த உண்மைப் பழங்கதைகளோடு ஒப்ப ஒருங்கு வைத்து, அவை எல்லாவற்றையும் நம்புகின்றவர்களே சைவர்கள் எனக் குருட்டுரை கூறித்திரிகின்றனர்.

வை

இனிப், போலிச் சீர்திருத்தக்காரர்களோ, இக் குருட்டுச் சைவர்களைப் போலவே, தாமும் உண்மையாவன பொய்யாவன இவையென்று பகுத்துணர்ந்து பாராதவர் கனாய், அவ்விரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பழித்துப்பேசி, ஒன்றையும் பற்றாத வெறும் பாழ்ங்கொள்கை யினை எங்கும் பரப்பிப், பொது மக்களைத் தீவினைச் சிறையிற் புகுத்தி வருகின்றனர். இங்ஙனம் போலிச்சைவர்களும் போலிச் சீர்திருத்தக்காரர்களுஞ் சைவசமய உண்மைக்கு ஒவ்வாதவைகளை முறையே குருட்டுப் பிடியாய்ப் பிடித்துங் குருட்டுத்தனமாய் அகற்றியும் வருவனவற்றிற் சில ஈண்டு எடுத்துக் காட்டுதும்:- சைவசமய முதலாசிரியராகிய

மாணிக்கவாசகருந் திருமூலரும்,

66

"மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்ததேவருங் காணாச் சிவபெருமான்’

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/264&oldid=1585876" இலிருந்து மீள்விக்கப்பட்டது