உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

66

மறைமலையம் 19

சிவனொ டொக்குந் தெய்வந் தேடினும் இல்லை ெ

'அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை

அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே

66

முன்னையொப் பாயுள்ள ள

மூவர்க்கு மூத்தவன்

தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்’

66

'கண்ணுத லானொரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் ஏனைப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவனென்று அறியகில் லாரே

என்றும் போந்த அருமைத் திருவுரைகளாற், பிறப்பு இறப்புக்களுட் படுவாரான எல்லார்க்கும் மேலாய்த் தான் பிறப்பு இறப்புக்கள் இன்றியிருந்து, அவ்வெல்லாரையும் அப் பிறப்பு இறப்புக்களுட் படுத்துவதாகிய சிவமே முழுமுதற் கடவுளென்று வரையறுத்து ஓதா நிற்கக், குருட்டுச் சைவர் களோ கந்தன், கணபதி, வீரபத்திரன், பிட்சாடணன், வைரவன், காளி முதலான எண்ணிறந்த பிறதெய்வங்களையும் அவற்றை யுயர்த்துங் கதைகளையும் கட்டிவிட்டு அவை தம்மை யெல்லாம் நம்பலாயினர். இவ்வாறு கு வ்வாறு குருட்டுச் சைவர்கள் கட்டிவிட்ட இத்தெய்வங்களையும் இத் தெய்வங் களைப் பற்றிய அருவருப்பான புராணகதைகளையுஞ் சைவசமயத்துக்கு உரியவைகளாகப் பிழைபடக்கொண்ட போலிச் சீர்திருத்தக்காரர்களோ வை தம்மை இகழ்வ தோடு அமைதி பெறாது 'இத் தெய்வங்களுக்கும் இப் புராணகதைகளுக்கும் அப்பாற் பட்டதாகிய முழுமுதற் சிவத்தையும் இகழ்வர்; உண்மையாய் நடந்த சிவனடியார் வரலாறுகளைக் கூறும் பெரிய புராணத்தையும் மேற் சொன்ன புராணங்களோடு ஒன்றாக வைத்துப் புறம்பழிப்பர்.

L

சாதிப்பித்துத் தலைக்கேறிய போலிச் சைவர்களும் அவரோ டொத்தாருங், குடிகெடுக்குத் தமது தீய கோட் பாட்டிற்கு இணங்கச், 'சமரச சன்மார்க்க' மாகிய சைவ வுண்மைகளை திரிபுபடுத்தும் நோக்கமே கொண்டு ஆலாலசுந்தரர் திருக்கைலையில் மாதரைக்காமுற்ற கதை”யுந், “திருஞானசம்பந்தர் சமணரைக் கழுவேற்றிய

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/265&oldid=1585877" இலிருந்து மீள்விக்கப்பட்டது