உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

233

கதை”யும், இவை போன்ற வேறு சிலவும் புதியவாய்ப் படைத்துப் பெரியபுராணத்தின்கண் நுழைத்துவிட் டிருப்ப, வை தம்மைப் பகுத்துணர்ந்து பார்க்கும் அறிவாற்ற லில்லாத போலிச் சீர்திருக்காரர்கள் “எல்ல செட்டிலக்க ஏகக்க என்னுந்தொலுங்கர் பழமொழிக்கு இணங்கப், பெரியபுராணம் முற்றும் பொய் என்றால் அது பொய்யாய் விடுமோ? கல்வெட்டுப் பட்டயங்களின் சான்றுகளானும், ஏனைச் செந்தமிழ் நுாற் சான்றுகளானும், பெரிய புராணத்து அடியார் வரலாறுகள் துாய உண்மை நிகழ்ச்சிகளாதல் அறிவிற்சான்ற பெரியார்களால் துணியப்பட்டு வருகின்ற தன்றோ?

ரு வே

இனி, வரையறுத்து உணரலாகாத அன்பின் உ சிவவுருவாமென்று அவ்அரும்பேருண்மையினை வலியுறுத்திச் சைவசித்தாந்த ஆசிரியரான திருமூலர்,

66

"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

தய்வத்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

என்றருளிச் செய்திருத்தலின் அம் மெய்மொழியைப் பின்பற்றி அன்புருவே சிவம் என்றும், ஏனைக் கல் செம்பு முதலியவற்றிற் சமைத்த வடிவங்களெல்லாம், எல்லையற்ற அவ் அன்பின் நுண்ணிய நிலையினை உணரும் உணர்வும் வலியில்லாத நம்மனோர் அதனை யுணர்தற்கொரு கருவி யாக வகுத்த அடையாளங்களே யல்லால்அவை தாமே சிவமாகா என்றும், ஆகவே, "திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனிதன்னைச் சிவனெனவே தேறினர்க்குச் சிவனுறைவ னாங்கே’ எனக் கூறும் அருளுரை போல்வனவெல்லாந் தூாலாருந்ததி' நயம்பற்றி யெழுந்தனவே யென்றற்குச் 'சிவமல்லாத அப்பருப்பொருள் வடிவுகளைச் சிவமே யெனத் தெளிந்தார்க்கு' என்னும் அவ்வுரையே சான்றாம் என்றும், எல்லா மக்களும் ஒருவர்க்கொருவர் அன்பினால் அளவளாவி ருவருக்கொருவர் உதவியாய் நின்று அறிவு செல்வம் ஒழுக்கம் முயற்சி முதலியவைகளாற் கீழ்நின்றாரை மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/266&oldid=1585878" இலிருந்து மீள்விக்கப்பட்டது