உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் 19

நின்றார் உயர்த்தி மக்க

உயர்த்தி மக்களுள் அன்பினையும் ஒற்றுமை யினையும் வளரச் செய்வதுடன் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையும் கொலையினின்றுங் காத்து அன்பையும் அருளையும் பெருகச் செய்வதே சிவத்தை வழிபடுவார்க்கு இன்றியமையாத கடமையா மென்றும் உண்மையான் உணர்ந்து ஒழுகுதல் உண்மைச் சைவர்க்கு அடையாளங்க ளாகும்.

6

மற்றுப், போலிச் சைவர்களோ இவ்வுண்மைகளை நன்குணராதாராய்த் திருக்கோயிலில் மக்களாற் செய்து வைக்கப்பட்டுள்ள கல்வடிவு சம்பு வடிவுகளைக் கடவுளினும் மேலாகக் கருதி, அவை தமக்குந் தம்மினுஞ் சிறந்தாராய்த் தம்மாற் கருதப்படும் பார்ப்பனர்க்குமே உரியவென்றும், அவற்றை யுட்சென்று வணங்குதல் தமக்குந் தம்மோடொத்தார்க்கு மன்றி ஏனையோரிற் கடவுள்பால் எத்துணை அன்புடையார்க்கும் ஆகாதென்றும், ஒழுக்கத் தால் உயர்குணத்தாற் கல்வியால் விழுமியவினையால் அன்பால் அருளாற் சிவநேயத்தால் எத்துணை யுயர்ந்தாரா யினும் அவரெல்லாந் தம்மைத் தாமாகவே தமது சிற்றறிவு முனைப்பாற் பிறப்பளவில் உயர்ந்தாராகச் சொல்லிக் கொள் வார்க்குத் தாழ்ந்தாராவரே யன்றி அவரோடு ஒத்தவ ராகாரென்றுங்கரைந்து, அன்புருவாஞ் சிவத்தின் நிலையைக் குறைப்பதுடன், அச் சிவத்தின் அருளாற் படைக்கப்பட்ட வியத்தகும் உடம்புகளில் உலவுவாரான தம்மோடொத்த மக்களையுந் தம்மினுங்கீழாகவுந் தம்போன்ற சிற்றறிவு வாய்ந்த தச்சர்களால் ஆக்கப்பட்ட கல்வடிவு செம்பு வடிவு களினுங் கீழாகவும் இகழ்ந்து, அவர் தம்மோடு ஒருங்கு அளவளாவுதலும் அவர்தம்மைத் திருக்கோயில்களுள் வணங்க விடுதலுஞ் செய்யோமென்று கலாம் விளைத்து

கின்றனர்! ஐயகோ! இவர்தந் தீச்செயல் அன்பையும் அருளையும் இரக்கத்தையுந் தனக்கு உயிராய்க் கொண்ட சைவசமயத்திற்கு எவ்வளவு மாறானதாயிருக்கின்றது! அதன் மங்காப்பெருமையினை எவ்வளவு மங்க வைப்பதாயிருக் கின்றது! அன்பும் அருளும் இல்லாத அவர்கள், அவ் விரண்டனையுந் தனக்கு இருகண்களாய்க் கொண்ட சைவ சமயத்திற்கு உண்மையில் உரிய சைவ ராதல் யாங்ஙனம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/267&oldid=1585879" இலிருந்து மீள்விக்கப்பட்டது