உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உரைமணிக்கோவை :

"எவரேனுந் தாமாக இலாடத் துற்ற திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி, உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து”

235

என்று சைவசமயாசிரியராகிய திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்திருக்க, அம் மெய்யுரைக்கு மாறாகச் சிவ வேடத்தை இகழ்ந்து சாதியை உயர்த்துப்பேசுங் குருட்டுக் குறும்பர்கள் ஒருகாலும் உண்மைச் சைவராதல் இல்லை யென்க.

இவ்வாறு சைவவுண்மைக்கு முழுமாறாய்ச் சாதி

யுயர்வினைக் கூறித் திரிவாராற் சைவசமயமும் அதற்கு உண்மையில் உரிய சான்றோர்களும் ஒருபுறம் நெருக்கப் படுதல்போலவே, சைவவுண்மையினைப் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டாத போலிச் சீர்திருத்தக்காரராலும் அது பெரிது நெருக்கப்படுதலைச் சிறிதுகாட்டுவாம். இறைவன் அன்புருவாய் நிற்றல்பற்றிச் சிவன் எனப் பட்டான். இதனை அவர்கள் எடுத்துக்கொண்டு அன்புதான் கடவுளாகு மன்றி, அன்பின் வேறாய்க் கடவுள் என்று ஒருபொருள் இல்லை யெனத் திரிபுரை நிகழ்த்துகின்றனர். மற்று, அன்பு என்பதே ஒரு குணம். குணம் எல்லாம் ஒரு பொருளைப் பற்றி நிற்குமே யன்றித் தனித்து நில்லாது. அன்புடையார் இருவரைக் கண்டால் அவர் தமக்குள் நிகழும் நெகிழ்ந்த நிகழ்ச்சியின் அடையாளங்களால் அன்பு இத்தகையது என்ற உணர் கின்றோம். இவ்வாற்றானன்றி அன்பைத் தனிப்படவைத் துணர்ந்தவர்கள் யாண்டுமே இல்லை. இங்ஙனமே, நன்மை என்பதும், அழகு என்பதும், அறிவு என்பதும் அக் குணங்களை யுடையார்பால் வைத்தறியக் கிடக்கின்றவே யல்லாமல்; அவரின் வேறாக அவை தனித்து அறியக் கிடத்தல் யாண்டுமே யில்லை. இங்ஙனமே, வண்ணம், வடிவு, அளவு, சுவை என்னும் நாற்பெரும் பகுப்பில் வந்தடங்கும் எல்லாக் குணங்களுந் தாந்தாம் பற்றி நிற்கும் பொருள்களின் வாயிலாகவே புலனாவதல்லது,அவற்றின் வேறாகநின்று புலனாவன அல்ல. ஆகவே, அன்பு என்னுந் தனிப்பெரு மென்குணமானது றைவன்பாற் புலனாதல்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/268&oldid=1585880" இலிருந்து மீள்விக்கப்பட்டது