உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் -19

அவனின் வேறாய்நின்று ஒருவாற்றானும் புலனாதல் இல்லையென் றுணர்க.

அற்றன்று, அன்பு என்னும் அம்மென்குணம், மக்கள் ஒருவரோடொருவர்அளவளாய் ஒருமித்து ஒழுகுதற்கண் விளங்கித் தோன்றலால், அங்ஙனம் அவர் ஒருமித்து வாழும் அன்புவாழ்க்கையே கடவுள் எனப்படும், இதனின் வேறாய்க் கடவுள் ஒன்று உண்டெனக் கோடல் மிகையாமாலெனிற், கூறுதும். மக்கள் பெரும்பாலும் ஒருவரோடொருவர் அன்புபூண்டொழுகுவது, அதனால் அவர் தாந்தாம் பெறும் நலங்குறித்தேயாம். தமது நலத்திற்கு இடையூறு நேருங்கால், அவ் விடையூறுசெய்வார்பால் அன்பின்றிப் பகைகொண்டு அவர்க்குத்தீங்கிழைத்தலில் எத்தகையோரும் முன்னணியில் முனைந்து நிற்கின்றனர். தமக்குத் தீங்கு செய்வார்க்குத்தாமுந் தீங்கு செய்யாமல், அவரோடு உண்மையாக உறவுகொண்டு நிற்பார் எவருமே யில்லை. தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய்தல் வேண்டுமென்று உள்ளக் கிளர்ச்சியோடு உரக்கத்திறமாய்ப் பேசுவோரே, தாம் பிறர்க்குச் சொன்னபடி தாமே நடந்துகாட்டாமல், தம்மைச் சிறிது குறைகூறி னார்க்கும் பெருந்தீங்கியற்றப்புகுவாரானால், மற்றை யோரைப்பற்றிக் கேட்பானேன்! தமக்கு இன்னா செய் தார்க்குந் தாம் இனியவே செய்வார் இந்நிலவுலகத்தில் எங்கேனும் உளராயின் அவரைத் தெய்வமாகவே கருதல் வேண்டுமல்லால், அன்னாரை மக்களுள் ஒருவராகக் கருதல் இழுக்காகும்.

ஏனென்றால், மக்கள் இயற்கையானது எங்கே உள் நுழைந்து பார்த்தாலுந் தமது நலத்திற்கு இடையூறு புரிவாரையுந், தமக்கு இன்னாசெய்வாரையும் பாய்ந்து கால்லும் நிலையிற்பதுங்கி நிற்றலையே காண்கின்றாம், இவ்வியற்கையினையுடைய மக்கள் ஒருவர்பால் ஒருவர் வைத்தொழுகும் அன்பும் அன்பென்று சொல்லுதற்கு ஏற்றதாமா! இன்று நண்பராயிருந்தவர் நாளைப் பகைவ ராகின்றார்; நேற்று பகைவராயிருந்தவர் இன்று நண்ப ராகின்றார்; இங்ஙனம் ஒரு நிலையின்றி மாறி மாறிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/269&oldid=1585881" இலிருந்து மீள்விக்கப்பட்டது