உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • உரைமணிக்கோவை

237

சல்லும் மக்கள் வாழ்க்கையில், எல்லாரும் அன்பால் ஒருமித்து வாழ்தல் ஒரு சிறிதுங் காணப்படாமையின், மக்கள் தம்முள் ஒருவர்பால் ஒருவர் அன்புவைத் தொழுகுதலே அமையும்; வேறு கடவுளென்று காணப் படாத ஒன்றைநம்பி அதன்பால் அன்புபூண்டொழுகுதல் எற்றுக்கு?" என்று வினாவுதல் மக்களியல்பும் மக்கள் வாழ்க்கையினியல்பும் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டா

மழுங்கிய அறிவினார்க்கேதகும்.

அற்றன்று, மக்கள் தம்முள் அன்புடையராய் ஒழுகுதல் காணப்படாவிடினும், நாம் மக்கள் எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதலே செய்வமாயின், அவ்வொழுக்கமே கடவுள் நிலையாம்; இதனின் வேறாகக் கடவுள் என ஒன்றை வைத்து வணங்குதல் வேண்டப்படாதெனின்; நன்றுசொன் னாய். எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதல் என்பது யாது? அவரவர் விரும்புவன தந்தும், அவரவர் வேண்டுவன செய்தும், அவரவர்க்குள்ள குறைகளை நீக்கியும் அவ ரெல்லாரும் மதம் உவக்குமாறு ஒழுகுதலன்றோ? இவ்வாறு எல்லார்க்கும் இனியராய் ஒழுகுதல் நம்மில் எவர்க்கேனும் இயலுமோ என்பதை ஆராய்ந்து பார்மின்கள்! " எல்லா ரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுக" என்று வாயினால் வெறும் பேச்சாகப் பேசி விடலாமே யன்றிப், பேசியபடி நடப்பது தான் அரிதாயிருக்கின்றது.

66

ஏனென்றால், மக்கள் ஒவ்வொருவரும் பலவேறு வகைப்பட்ட விருப்பமும், பலவேறு வகைப்பட்ட செய்கை யும், பலவேறு வகைப்பட்ட குறைபாடுகளும் உடையரா யிருக்கின்றனர்; தெய்வ வழிபாட்டிலுங் கொள்கைகளிலும் பலதிறப்பட்டவர்களாயிருக்கின்றார். யாங்ஙனமெனிற் காட்டுதும். மக்களிற் பலர் கள்ளுண்டு களிப்பதில் விருப்பம் மீதுார்ந்திருக்கின்றார்; பலர் ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின்

(

ஊனை

வயிறார உண்பதில் அவா மிகுந்து நிற்கின்றனர்; பலர் வேசிமார் வீடே துறக்கமெனக்கருதி அன்னவர்பாற் பெறும் புணர்ச்சியின்பத்தையே துறக்க இன்பமென விழைந்துழல் கின்றார்; வேறுபலர் சூதாடியோ பொய் சொல்லியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/270&oldid=1585882" இலிருந்து மீள்விக்கப்பட்டது