உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

238

மறைமலையம் 19

புரட்டுகள் செய்தோ கைக்கூலிவாங்கியோ அழிவழக்குகள் ஆடியோ பிறர் பொருளைக் கவர்ந்து ஆரவாரமாய்ச் செல்வரென வாழ்வதிற் சிறந்து நிற்கின்றனர். இங்ஙன மெல்லாம் பல திறப்பட்ட விழைவுஞ் செயலுமுடையரா யிருக்கும் மக்கட் டொகுதியினர்பால் நாம் அன்புடையராய் ழுகுதல் எப்படி? கள்ளுண்பார்பால் நாம் அன்புபூண்டு ஒழுகல் வேண்டுமாயின், அவர் விருப்பப்படி நாமுங் கள் ளுண்டோ, அல்லது அவர் கட்குடிக்க வேண்டிக் காசு கேட்குங்கா லெல்லாம் அவர்க்குக் காசுகொடுத்தோ அவர் நெஞ்சம் உவக்க நடத்தல் வேண்டும். இவ்வாறன்றிக், கள்ளருந்தல் தீது, அதனை ஒழித்திடுக” என்று அவர்க்கு அறிவு சொல்லப் புகுவமாயின், அவர் நம்மை யருவருத்துப் பகைகொண்டு நம்மை துன்புறுத்துவராகலின், அவர்பால் யாம் அன்புடையரா யொழுகுதல் யாங்ஙனங் கைகூடும்! அங்ஙனமே சிற்றுயிர்களைப் பதைபதைக்கக் கொன் அவற்றின் தள னைத் தின்பவர்கள்பால் யாம் அன் பூண் பூண்டெ ழுகுதல் வேண்டுமாயின், ஒன்று அவர் வழியில் நாம் சென்று அவரோடொத்து நடத்தல் வேண்டும், அல்லது அவரை நம் வழிக்குத் திருப்புதல் வேண்டும். ஊன் உண்பார் தாகை மிகுதியாயிருத்தலால் அவர் அத்தனை பேரையும் நம் வழிக்குத் திருப்பிவிடலாமெனக் கருதுவது கனவிலுங் கைகூடற்பாலதன்று.

பே

பு

இரக்கமற்ற இவ்வன்னெஞ்சர் எல்லாரிடத்தும் நாம் அன்புபூண்டு நடத்தல் இயலுமோ என்பதனை உணர்த்து பார்மின்கள்! இங்ஙனமே, வேசிமா ரின்பத்தை விழைந்து நிற்பாரோடுஞ், சூது பொய் புரட்டு முதலான தீயசெயல்களில் திறமாய்ப் பழகியிருப்பாரோடுங், கைக்கூலி கொண்டு அழிவழக்காடிப் பிறர் பொருளைக் கவருங் கள்வ ரோடும் எல்லாம் நாம் அன்புடையராய் நடத்தல் எவ் வாற்றானும் இயலுமோ? இயலாதே. இவரை யொப்பவே, காளி கூளி பேய்ச்சி மாரி மதுரைவீரன் கறுப்பண்ணன் இராமன் கண்ணன் முதலான சிறு தெற்வங்களை வணங்கு வார் கூட்டமும் பலப்பலவாய்க் காணப்படுகின்றன. இக் கூட்டங்கள் மாட்டெல்லாம் அறிவுடையார் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/271&oldid=1585883" இலிருந்து மீள்விக்கப்பட்டது