உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை :

239

அன்புவைத்தொழுகல் ஒருசிறிதும் இயலாதென்பதனை யாம் சொல்லுதலும் வேண்டுமோ! இனிக், கொள்கை யளவிற் பார்த்தாலும் ஒருகூட்டத்தார் தெய்வம் இல்லை யென்கிறார்,

மற்றொரு கூட்டத்தார் நாமே தெய்வம் என்

.

கின்றார்; ஒரு கூட்டத்தார் அறிவுடைய உயிர்கள் இல்லை, உயிர் எல்லாங் கடவுளே என்கின்றார்; மற்றொரு கூட்டத் தார் கடவுளும் இல்லை, உயிர்களும் இல்லை, எல்லாம் வெறும் பாழே என்கின்றார்கள்; ஒரு கூட்டத்தார் நம்மால் நேரேயறியப்படும் இவ்வுலகம் ஒன்றே மெய், நம்மால் நேரேயறியக்கூடாத மற்றையவெல்லாம் வெறும் பொய் என்கின்றார்; மற்றொரு கூட்டத்தாரோ நம்மாற் காணப்படும் வ்வுலகமே பொய், நம்மறிவுக்கு எட்டாத கடவுள் ஒன்றே மெய் என்கின்றார். இங்ஙனமே அரசியற் றுறைகளிலும் உலகியலொழுக்கங்களிலும் மக்கட் பகுப்பினர் ஒன்றி 6 னான்று மாறுபட்ட கொள்கைகள் உடையவர்களாயிருக் கின்றனர். இவரெல்லாரிடத்தும் ஒரு நிலையான அன்பு வைத்து அவரவர்க்கு ஏற்றபடியெல்லாம் ஒழுகுதல் எவர்க் கேனும் ஏலுமோ? இன்னும், மக்களுள் நோய்கொண்டார் தொகைக்கும் வறுமைப்பட்டார் தொகைக்கும் கணக்கே யில்லை. அன்னவர்மாட் டெல்லாம் அன்புபூண்டு அவர்க் குள்ள நோயை நீக்கவும் வறுமையைப் போக்கவும் எவராலேனுங் கூடுமோ? அற்றேல், மக்கள்பால் அன்பு பூண்டொழுகுதல் இயலாதாயின், அன்பொழுக்கமே உலகத்தின்கண் இல்லையாய் ஒழியுமேயெனின்; அற்றன்று; மக்கள் எல்லாரிடத்தும் அன்புவைத்து ஒழுகுவோம் எனப்புகுவாரே, அம்மக்களிடத்துக் காணப்படும் அருவருப் பான குணங்களையும் அருவருப்பான சயல்களையுங் கண்டு, தாம் அவர் பால்வைத்த அன்பை யிழந்து வன் கண்ணாராய் மாறுவர். மற்று, மக்கள்போல் L மாறுந் தகையன் அல்லானாய், மக்களுக்குள்ள குற்றமுங் குறை பாடும் இல்லானாய் எஞ்ஞான்றும் அன்பே யுருவாய் விளங்கும் எல்லாம் வல்ல இறைவன்பால் அன்புவைத்த வரோ, தம்முடலுயிரெல்லாம் அன்பினாற் புரைபுரை கனிந்து அன்புருவாய் விளங்குவர்; இது குறித்தே தெய்வத் திருமூலர்,

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/272&oldid=1585884" இலிருந்து மீள்விக்கப்பட்டது