உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

66

  • மறைமலையம் 19

'அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

என்று அருளிச்செய்தார்.

அது பொருத்தமே யென்றாலுங், காணப்படும் மக்க ளிடத்து அன்பு பாராட்டமாட்டாத நாம், காணப்படாத றைவனிடத்து மட்டும் அன்பு பாராட்டுதல் யாங்ஙனங் கூடுமெனிற் கூறுதும். நாம் மக்களைக் காண்கின்றோம் என்பது பிழைபாட்டுணர்ச்சியேயாம். மக்களாகிய உயிர்கள் போர்த்துக் கொண்டிருக்கும் உடம்பைத்தாம் நாம் பார்க் கின்றனமே யன்றி, அவ்வுடம்பில் நிறைந்த உயிரைப் பார்க் கிறோமில்லை. வ்வூனக்கண்களாற் காணப்படுவன வெல்லாம் அறிவில்லாத பருப்பொருள் வடிவங்களேயாம்; பருப்பொருள் வடிவங்களுள்ளும் மிக நுண்ணியவாயுள்ள வடிவங்களை நம் கண்கள் பார்க்கமாட்டுவன அல்ல; நுண்ணிய பொருள்களை நோக்கி யுணர்தற்குப் பெருக்கக் கண்ணாடி (microscope) முதலான பிறகருவிகளின் உதவி இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இவ்வாறு அறி வில்லாப் பொருள்களிலேயே மிக நுண்ணியவாய் இருப் பவைகளைப் பார்க்கமாட்டாத நாம், அறிவுப் பொருளாகிய உயிரை எங்ஙனங் காணவல்லேம்! அறிவில்லாப் பொருளாய் முடியுமன்றோ? ஆகவே, நம் ஊனக்கண்களாற் காணப் படுதற்கு உரிய இயல்பு வாய்ந்தது அறிவில்லாப் பருப் பொருளும், ஞானக்கண்களால்உய்த்துணர்ந்து அறியப்படும் இயல்பு வாய்ந்தது அறிவுடைய உயிர்ப் பொருளுமாதல் தற்றென விளங்கோ நிற்கும். அறிவுடைய அ உயிர்க ளெல்லாம் நம் அறிவினால் உய்த்துணர்ந்து அறியப் படுவனவா யிருக்கின்றனவேயல்லாமல், நம் கண்களாற் காணப்படுவனவாய் இருக்கவில்லை. ஆயினும், அவைகளை நம் கண்களாற் காணப்படுவனவாகவே வைத்து அன்பு பாராட்டி வருகின்றோம்.

தாயானவள் தன் பிள்ளையின் உயிரைக் காணவில்லை, பிள்ளையானது தன் தாயின் தாயின் உயிரைக் காணவில்லை; மனைவியானவள் தன் கணவன் உயிரைக் காணவில்லை; கணவனானவன் தன் மனைவி உயிரைக் காணவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/273&oldid=1585885" இலிருந்து மீள்விக்கப்பட்டது