உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

241

அவ்வாறிருந்தும், அவரெல்லாம் ஒருவருயிரை ஒருவர் கண்டாற்போல் ஒருவர்மேலொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்து வருதலைக் காண்கின்றனம் அல்லமோ? ஆகவே, ஒருவருயிர் ஒருவர்க்குக் கட்புலனாகாவிடினுங் கட்புல னாவது போலவே வைத்து அறிவினால் நேரேயறியப் படுதலின், அதனை அறியப்படாத பொருளாகக் கருதுவார் எவருமே யில்லை. இதுபோலவே, கடவுளாகிய அறிவுப் ஈருளும் நம் ஊனக்கண்களுக்குப் புலனாவதன்றாய், நம் ஞானக்கண்களால் உய்த்தறியப்படும் நுண்பொருளாய், இவ்வுலகுயிர்களை யெல்லாந் தனக்கு உடம்பாகக் கொண்டு நிறைந்து நிற்றல் நன்கு விளங்காநிற்றலின், நிற்றலின், இவ்வுலகம் எங்கணுமுள்ள எல்லா மக்களுங், கடவுள் உண்டு என்னு உணர்ச்சி வலியுடையவர்களாய் அதனை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்து போதருகின்றார். இவ்வாற்றாற், கடவுள் ஒன்றுமட்டுந்தான் காணப்படாத பொருள் என்று கூறுவாருரை, அவர் தமக்குப் பகுத்தறிவு இல்லாமை யினையே நன்கு காட்டுகின்றது. கடவுளைப் போலவே எண்ணிறந்த சிற்றுயிர்களும் எண்ணிறந்த மக்களுயிர் களும், அவ்வுயிர்களின் பல்வேறு குணங்களும் நம்முடைய ஊனக்கண்களுக்கு ஒரு சிறிதும் புலனாகின்றன. ஆதலால் நம் கண்களுக்கு புலனாகவில்லையே யென்று நுண்ணிய பொருள்களை இல்லை யென்று துணிந்து கூறுதல் ஆ ஆகாது.

அஃதொக்குமென்றாலும், மக்களுயிரும் மக்களால்லாத பிற உயிரும் பற்பல உடம்புகளிலிருந்து உணவு தேடுதலும் உறங்குதலும் இன்புறுதலும் போராடுதலும் முதலான பலப்பல தொழில்களைச் செய்யுமுகத்தால், உடம்பின் வேறாய் உடம்பிலிருக்கும் உயிர்கள் பல உண்டு என்பதனை நமக்குத் தெளிய உணர்த்துதல்போலக்,கடவுள் என்பதோர் அறிவுப்பொருள் இருப்பதும் உண்மையாயின், அதுவும் அங்ஙனம் பலதொழில்களைச் செய்யும்முகத்தால்தான் உண்டு என்பதனை நமக்குத் தளிய உணர்த்துதல் வேண்டுமேயெனில்; நம் போன்ற சிற்றுயிர்கட்கும், பேருயி ராகிய கடவுட்கும் உள்ள வேற்றுமையினை யறியமாட்டா தாரே இங்ஙனம் வினாவுவர். நம்மையொத்த சிற்றுயிர்க ளெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்தில் உள்ள ஒருபொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/274&oldid=1585886" இலிருந்து மீள்விக்கப்பட்டது