உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

பொ

  • மறைமலையம் 19

யறியுமேயன்றி, எல்லாவிடத்தும் எக்காலத்தும் எல்லாப் பா ரு ள்களையும் ஒருங்கே அறியமாட்டா. ஒரு மாந் தோப்பில் ஒருபொழுது நிற்கும் ஒருவன் அதன்கண் உள்ள உள்ள பல மாமரங்களில் ஒரு மரத்தினையும், அம்மரத்தின் கட் கனிந்து தொங்கும் பல கனிகளுள் ஒரு கனியினையுமே ஒரு நேரத்திற் காணவல்லுநன் ஆவன்; அவன் ஒருவனே ஒரே நேரத்தில் இவ்வுலகம் வ்வுலகம் எங்கணும் உள்ள மாந்தோப்பு களையும், அதன்கண் உள்ள பலவகையான மாமரங்களை யும், அம்மரங்களிலுள்ள இலை பூ காய் கனி முதலான அவற்றின் பயன்களையும் ஒருங்கே யுணர வல்லனாகன்; இங்ஙனம் ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு பொருளையே ஒருகால் அறியுஞ் சிற்றறிவு வாய்ந்தவர்களா யிருத்தல்பற்றி, மக்களுக்கு அவரவர்தஞ் சிற்றறிவு நிகழ்ச்சிக்கு ஏற்ற சிறு சிறு உடம்புகளே வாய்த்திருக்கின்றன. ஆதலாற் சிற்றறிவு வாய்ந்த அவர்கள் சிற்றறிவு நிகழ்ச்சிக்கு இடமான தம் முடம்புகளையும், அவ்வுடம்புகளிற் புலனாகும் பலவேறு தொழின் முயற்சிகளையுந் தம்முள் எளிதிலே உணரவும் பிறர்க்கு உணர்த்தவும் வல்லுநராகின்றார்.

மற்றுக், கடவுளோ அங்ஙனஞ் சிற்றறிவுடைய உயி ர ன்றாய், எண்ணிறந்த உலகங்களையும் உயிர்களையும் ஒருங்கே யறிந்து, அவை தம்மை யெல்லாம் ஒரு காலத்தின்றி எக்காலத்தும் இயக்குவதாய் இயக்குவதாய் எங்கும் நிறைந்து நிற்ப தொன்றாகலின், ஓரிடத்துள்ள ஒரு பொருளை யொரு

காலத்தன்றி யுணரமாட்டாத நாம், அதன் பரும்

பரப்பையும் அதன் பேராற்றல் நிகழ்ச்சிகளையும் எங்ஙனம் பரந்து நின்று ஒருங்கறிய வல்லேம்! கடவுள் பரந்து நிற்கும் அளவும் நாமும் பரந்து நின்று அறியக்கூடுமாயினன்றோ, அதன் பரப்பும் ஆண்டாண்டு அது நிகழ்த்துந் தொழில் நிகழ்ச்சிகளும் நாம் முற்ற அறிதல் கூடும். அவ்வாறு பரந்து நிற்கும் ஆற்றல் நம்பால் இல்லாதபோது, நாம் அதனை நேரே முழுதுமறிதல் யாங்ஙனங் கூடும்? ஆகவே, நமது

பருப்பொருளறிவு கொண்டு இறைவன்றன் நுண்டொழில் நிகழ்ச்சிகளை நாம் உணரல் ஏலாமையே பற்றி, இறைவனை இல்லையென்றால், அதனியல்பை நுண்ணிதின் உணர மாட்டாதார் வெற்றுரையேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/275&oldid=1585887" இலிருந்து மீள்விக்கப்பட்டது