உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

251

களானால், எவராலும் அமைக்க முடியாத எண்ணிறந்த உடம்புகளையும் எண்ணிறந்த உலகங்களையும் எல்லையற்ற உலகத்துப் பொருள்களையும் நாம் கேளாமலே அமைத்துக் கொடுத்து, மற்றைத் தொழிலாளரும் புலவரும் அழிந் தொழிவது போல் அழிந்தொழியாமல், எக்காலத்தும் எவ்விடத்தும் நம்மோடு உடனிருக்கும் எல்லாம் வல்ல பருமானைக் காண்பதற்குங் கண்டு வணங்குதற்கும்

மக்காளாகிய நாம் இன்னும் எவ்வளவு மிகுந்த பேராவல் உடையவர்களாய் இருக்கவேண்டும். மக்களிற் சிறந்தாரா யுள்ள சிலரைக் கண்டு வணங்குதலாலேயே, நம்மனோர்க்கு அத்தனையன்பும் இன்பமும் உண்டாகுமானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாகல் வேண்டும்! ஆதலால், மக்களுக்குக் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்ட வனக் கரையும் ஒரு சிலரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்து கொள்க.

இனி, 'விருப்பு வெறுப்பில்லாத கடவுள் தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனவுந் தனக்குத் திருக்கோயில்களுந் திருவிழாக்களும் அமைத்துத் தன்னை அவர்கள் வழிபடுதல் வேண்டுமெனவும் விரும்புவரோ' என வினவி அவர் நம்மனோரை ஏளனஞ்செய்தார். கடவுள் தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனத் தன் திருவுள்ளத்திற் கருதுவது, அதனால் தனக்கு ஒரு பெருமை தேடிக்கொள்ளுதற்கு அன்று, ருவன் பிறனொருவனை னாருவனை வணங்குவது அச்சத்தினாலும் நிகழும்; அன்பினாலும் நிகழும், செல்வத்தினாலேனுங் கல்வியினாலேனுந் தலைமையினாலேனும் வலிமையினா லேனும் சிறந்தானாயிருக்கும் ஒருவனைச் செல்வமுங் கல்வியுந் தலைமையும் வலிமையும் இல்லாத பிறர் பெரும்பாலும் அச்சத்தால் வணங்கா நிற்பர்; சிறுபான்மை யன்பினாலும் வணங்கா நிற்பர். மேற்சொன்ன வளங்களுடை யோன் தன்னையே பெரியனாக மதித்துத் தன்னை வணங்குவோரை மதியாது ஒழுகும் வரையில், அவனை வணங் வார் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அங்ஙனஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/284&oldid=1585896" இலிருந்து மீள்விக்கப்பட்டது