உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 19

னி, மக்கள் எல்லாரும் ஏன் ங்ஙனங் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் வணக்கமும்உடையரா யிருக்கின்றன ரென்றால், அவர்களனைவரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும் வேண்டியவர்களா வர்களா யிருக்கின்றனர். வியப் வியப்பான இந்த உடம்பையும் இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள் களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பண்டங்களையுந் தமக்கு ஆக்கிக் கொடுக்கத்தக்க பெரு வல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும் உள்ள ஒரு முழுமுதற் கடவுள் கட்டாயம் இருக்கவேண்டுமென்னும் உணர்ச்சி எல்லார் உள்ளங்களிலும் யற்கையாகவே தோன்றா

நிற்கின்றது.

இனி, எவராலும் படைக்க முடியாத இத்தனை உடம்புகளையும் இத்தனை உலகங்களையும் இத்தனை அரும் பொருள்களையுந் தமக்குப் படைத்துக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உண்டு என்னும் உணர்ச்சி வந்தவுடனே, அவனைக் காணுதற்குங் கண்டு வணங்குதற்கும் எல்லாருக்கும் பேரவா உண்டாதலும் இயல்பேயாம். சலவைக்கல்லில் திருத்திச் சமைக்கப்பட்ட மிக அழகான ஓர் உருவத்தையேனும், பல வண்ணங்களாற் குழைத்துத் திறமாக எழுதப்பட்ட ஓர் ஓவியத்தையேனும், வானத்திற் பறக்கும் ஒரு மயிற்பொறியையேனுஞ்,சுவைத்த சொல்லும் பழுத்த

பொருளும் நிறைந்த ஒரு நுாலையேனும் இயற்றிய யற்றிய கைத் தொழிலாளரும் நல்லிசைப் புலவருந் தமது காலத்தில் உயிரோடிருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்களைக் காண்டற்குங் கண்டு வணங்குதற்கும் மக்கள் எவ்வளவு விழைவுடையராய் விரைந்து செல்கின்றனர்! சென்று, அவர் களை மனம் உருகி வணங்கி வாழ்த்தி எவ்வளவு இன்புறு கின்றனர்! சிற்றறிவுடைய மக்கட் பிறவியெடுத்தாரிலேயே சிறிது சிறந்து அறிவுவாய்த்த கைத் தொழிலாளரையும் நல்லிசைப் புலவரையும் அவர் அமைக்கும் உருவ அமைப்பு நூல் அமைப்பின் அழகால் மனம் இழுக்கப்பட்டமக்கள் தேடிச் சென்று கண்டு வணங்கப்பேராவல் கொள்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/283&oldid=1585895" இலிருந்து மீள்விக்கப்பட்டது