உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

9. சைவ சமயத்தின்

தொன்மையும் தனிச்சிறப்பும்

சைவ சமயம்' என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேதொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கை யாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச்செய்து, மற்றை நாட்டவர்க்கு இல்லாத் தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது. அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு விளங்கச்செய்தது எப்படியென்றாற், கூறுதும்: யன்றாற்,கூறுதும்: இந்நிலவுலகத்தில் எங்கும் ம் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டுவாழ்க்கையிலிருப்பினும், எல்லாரும் ‘கடவுள் ஒருவர் உண்டு'என்னும் உணர்ச்சியும் அக் கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட்பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நுால்கள் எழுதியிருக்கும் ஆங்கிலஆசிரியர்கள் கடவு ளுணர்ச்சியில்லாத ஒரு மக்கட் கூட்டத்தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது' என்று முடிவுகட்டிச் சால்லுகின்றார்கள். நமது நாட்டிலும் மிகத் தாழ்ந்தோர் முதல் மிக உயர்ந்தோர் ஈறாக உள்ள எத்திறத்தாருங்

கடவுளு

வுளுணர்ச்சியும், அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற பலவகையான வணக்க முறைகளும் உடையராய் இருத்தலை நாடோறும் நாம் எங்குங் கண்டு வருகின்றோம். ஆகவே, கடவுளு ணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்தவர்கள் உயிர் வாழ்தல் இயலாதென்பது இனிது விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/282&oldid=1585894" இலிருந்து மீள்விக்கப்பட்டது